நாகா முன்செட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகா முன்செட்டி [1] (பிறப்பு: 25 பிப்ரவரி 1975) ஆங்கில மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குனர், செய்தி வாசிப்பாளர், செய்தியாளர் ஆவார். பிபிசியின் பிபிசி பிரேக்பாஸ்ட் நிகழ்ச்சியின் வழங்குனராக பணியாற்றுபவர். பிபிசி உலகச் செய்திகள் தொலைக்காட்சி அலைவரிசையில் வழங்குனராகவும், பிபிசி 2 தொலைக்காட்சி அலைவரிசையில் வொர்க்கிங் லஞ்ச் நிகழ்ச்சியின் வழங்குனராகவும் பணியாற்றியவர்.

ஆரம்ப கால வாழ்க்கையும், பணியும்[தொகு]

தெற்கு இலண்டனின் ஸ்டீரீதம் பகுதியில் பிறந்து வளர்ந்த முன்செட்டியின் பெற்றோர் தாய், இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தந்தை, மொரீசியசைச் சேர்ந்தவர்.[2][3][4] தனது தொடக்கக் கல்வியை தெற்கு இலண்டனின் டூட்டிங் மாவட்டத்திலுள்ள கிராவெனே பள்ளியில் கற்றார்.[5] லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம், மொழி கற்று 1997 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.[6] முதல் பணியாக, இலண்டனிலிருந்து வெளியாகும் ஈவினிங் ஸ்டாண்டர்டு நாளிதழில் செய்தியாளராகப் பணியாற்றினார்.[7] அதன் பிறகு தி அப்சர்வர் இதழின் வணிகச் செய்திகள் பிரிவில் பணியாற்றினார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Moorhead, Joanna (17 June 2016). "Naga Munchetty: When I said I was studying English, my mum said, 'What are you going to do – become a poet?'". தி கார்டியன். https://www.theguardian.com/lifeandstyle/2016/jun/17/naga-munchetty-when-i-said-i-was-studying-english-my-mum-said-what-are-you-going-to-do-become-a-poet. "when I told them I was doing English literature at university" 
  2. "Naga Munchetty: When I said I was studying English, my mum said, 'What are you going to do – become a poet?'". TheGuardian.com. 17 June 2016.
  3. Segalov, Michael (12 April 2020). "Sunday with Naga Munchetty: 'I'm bereft not to be playing golf'". The Guardian. https://www.theguardian.com/lifeandstyle/2020/apr/12/sunday-with-naga-munchetty-im-bereft-not-to-be-playing-golf. 
  4. Duerden, Interviews by Nick. "Relative Values: the TV presenter Naga Munchetty, 42, and her mother, Muthu, 65" (in en). The Times. https://www.thetimes.co.uk/article/relative-values-the-tv-presenter-naga-munchetty-42-and-her-mother-muthu-65-ct6hgx2jm. 
  5. Webber, Richard (16 February 2018). "Mrs Berry and Mr Barbrook by Naga Munchetty". TES. https://www.tes.com/magazine/article/mrs-berry-and-mr-barbrook-naga-munchetty. 
  6. "Prominent alumni". University of Leeds. பார்க்கப்பட்ட நாள் 8 May 2021.
  7. 7.0 7.1 Naga Munchetty BBC News, 3 October 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகா_முன்செட்டி&oldid=3945548" இலிருந்து மீள்விக்கப்பட்டது