நாகர் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகர் கோட்டையிலிருந்து

நாகர் கோட்டை (Naggar Castle) என்பது ஒரு இடைக்காலத்தில் கட்டப்பட்ட கோட்டை ஆகும். இது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் குலுவில் அமைந்துள்ளது. கி.பி 1460இல் குலுவின் இராஜா சித் சிங் என்பவரால் கட்டப்பட்டது. இது 1978 முதல் இமாச்சலப் பிரதேச சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் (ஹெச்.டி.டி.டி.சி) பாரம்பரிய உணவகமாகs செயல்படுகிறது.[1][2]

நாகர் கோட்டை

வரலாறு[தொகு]

பல நூற்றாண்டுகளாக இக்கோட்டை மன்னர்களின் உத்தியோக பூர்வ இடமாக இருந்தது.[3] ஒரு புராணத்தின் படி, ராஜா சித் சிங், ராணா போன்சலினால் கைவிடப்பட்ட கர்தாக் அரண்மனையின் கற்களைப் பயன்படுத்தி கோட்டையைக் கட்டினார்.[4] கற்களைக் கைமுறையாக மாற்றுவதற்காக பியாஸ் ஆற்றின் இடது மற்றும் வலது கரைகளை இணைக்க ஒரு மனிதச் சங்கிலியை உருவாக்கினார். 1905 பூகம்பத்தில் இந்த கோட்டை தப்பித்தது. பள்ளத்தாக்கிலும், அருகிலுள்ள நகரமான ஜாவாவிலும் உள்ள பெரும்பாலான வீடுகள் முற்றிலுமாக பாழடைந்த நிலையில், கோட்டையில் பூகம்பத்தைத் தடுக்கும் நுட்பங்களைப் பயன்படுத்தியிருந்ததால் பேரழிவிலிருந்து தப்பியது.

இமாச்சல் பிரதேச சுற்றுலா மேம்பாட்டு கழக அலுவலகம், சிம்லா

மேலும் காண்க[தொகு]

  • நாகர், இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்கால நகரம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகர்_கோட்டை&oldid=3144585" இருந்து மீள்விக்கப்பட்டது