நாகபுரி எருமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகபுரி எருமை (Nagpuri buffalo) என்பது இந்தியாவின் மகாராட்டிராவில் தோன்றிய எருமை இனமாகும். அதிகப் பால் உற்பத்தியுடன் வறட்சியினைத் தாங்கும் குணங்களை இணைக்கும் எருமைகளின் இனங்களில் இது சிறப்பாக உள்ளது. இது பாதகமான காலநிலை நிலைமைகளில் சிறந்த விகிதத்தில் உள்ளது. இது ஓர் ஆற்று நீரில் பொழுதைக் கழிக்கும் வகையிலான எருமை. இது மத்திய இந்திய இனம் ஆகும்.[1] இந்த இனத்தில் "பெராரி", "கவோராணி", "புரந்தாடி", "வர்காடி", 'கோலாவி ", "அர்வி ", "கோலோகன்", "கங்கோரி", "சாகி" மற்றும் "சந்தா" போன்ற பல பெயர்களின் அழைக்கப்படுகின்றன.[2]

தோற்றம்[தொகு]

நாகபுரி எருமை எனும் பெயருக்குப் பொருந்துவது போல, இந்தியாவின் மகாராட்டிராவின் விதர்பா பகுதியினைச் சேர்ந்த இனமாகும். இந்த இனத்தினைச் சேர்ந்த எருமைகள் விதர்பா பிராந்தியத்தின் கடுமையான பகுதி வறண்ட நிலைமைகளுக்கு ஏற்ப வாழும் தன்மையினைத் தழுவி உள்ளன.[3]

பண்புகள் [4][தொகு]

நாகபுரி எருமையின் தோல் கருமை நிறத்துடன்[1] முகம், கால்கள் மற்றும் வால் நுனிகளில் வெள்ளைத் திட்டுகள் இருக்கும். இருப்பினும், நாகபுரி எருமை வகைகளுள் ஒன்றான "புரந்தாதி" விகாரமானது; இவை சற்று பழுப்பு நிறத்தில் இருக்கும். கொம்புகள் நீளமாகவும், தட்டையாகவும், வளைந்ததாகவும் இருக்கும். கழுத்தின் ஒவ்வொரு பக்கமும் தோள்பட்டை வரை பின்னோக்கி வளைந்திருக்கும். பெரும்பாலும் இவை மேல்நோக்கி காணப்படும். ஆண் எருமையின் சராசரி உயரம் 145 செமீ ஆகும். இது பெண் எருமையில் 135 செமீ ஆகும்.

பராமரிப்பு[தொகு]

நாகபுரி எருமை பகுதி தீவிர மேலாண்மை முறையில் பராமரிக்கப்படுகின்றன.[5]ஆண்களின் சராசரி உடல் எடை 525 கிலோவாகவும், பெண்களின் உடல் எடை 425 கிலோவாகவும் உள்ளது.[6] இப்பகுதியில் உள்ள எருமை மாடுகள் மற்றும் கன்றுகள் முக்கியமாகக் கொழுப்பு உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன. ஒரு பாலூட்டலுக்குச் சராசரி பால் மகசூல் 1039 கிலோவாகவும். பாலில் கொழுப்பு சராசரியா 8.25% ஆகவும் உள்ளது.[7] இவை நாகபுரியின் வெப்பநிலையான 47° செல்சியசு வரை தீவிரக் காலநிலை நிலைமைகளைத் தாங்க வல்லது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Banerjee,G.C, Animal Husbandry (8th edition)
  2. A. R. Sirothia, D.S. Kale and S.B. Kamble
  3. "Nagpuri".
  4. https://agritech.tnau.ac.in/animal_husbandry/animhus_buffalo%20breeds.html
  5. A Report on Nagpuri Buffalo by Kazi Abdus Sobur
  6. Banerjee,G.C, Animal Husbandry
  7. 7.0 7.1 Lactational performance of Shahi strain of Nagpuri buffalo
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகபுரி_எருமை&oldid=3923046" இலிருந்து மீள்விக்கப்பட்டது