நவீன மொழிக் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நவீன மொழிக் கூட்டமைப்பு (Modern Language Association of America) என்னும் நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது. இது மொழிகளையும், அவற்றின் இலக்கியங்களையும் கற்பிக்கும் முன்னணி நிறுவனம் ஆகும். [1] இது 100 நாடுகளைச் சேர்ந்த 30,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள், பட்டதாரிகள் உள்ளிட்டோரும் அடக்கம். இவர்கள் ஆங்கிலத்தையும் ஏனைய நவீன மொழிகளையும் கற்கவோ, கற்பிக்கவோ இணைந்துள்ளனர். [1][2] இதன் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள நியூ யார்க் நகரில் உள்ளது. இதன் செயல்பாடுகள், கொள்கைகள் யாவும் உலகளாவிய நோக்கத்தை உடையவை. [1]

வரலாறு[தொகு]

இந்த அமைப்பை 1883-இல் தொடங்கினர். லத்தீன், கிரேக்கம் உள்ளிட்ட செம்மொழிகளை கற்பிக்கவும், அவற்றைப் பற்றி உரையாடவும் முடிவு செய்தனர்.[1] அமெரிக்காவின் கற்றோர் சமூக மன்றத்தின் கூற்றின்படி, இந்த அமைப்பு, ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிய மொழி, இத்தாலியம் உள்ளிட்ட நவீன மொழிகளையும், அவற்றின் இலக்கியங்களையும் கற்பதற்காகவும், கல்வி, சமூக, இலக்கிய அறிவை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டது.

நிர்வாகம்[தொகு]

இதன் பணியார்களை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். [3] இதை செயற்குழு கண்காணிக்கும். இந்த குழுவிற்கான ஆட்களையும் உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கின்றனர்.

செயற்பாடுகள்[தொகு]

இந்த அமைப்பு பல இதழ்களை வெளியிடுகிறது. இவற்றில் இந்த அமைப்பின் வெளியீடுகளைப் பற்றிய நூலை குறிப்பிட்டு சொல்லலாம். ஆய்விதழ்களை எழுத விரும்பும் மாணவர்களுக்கான உதவி நூலையும் வெளியிட்டனர். இதை 6,500,000 பேர் வாங்கியிருக்கின்றனர். மொழி, இலக்கியம் தொடர்பான தரவுத்தளத்தையும் இணைய வழியில் வழங்குகிறது. [4] முக்கியமான முப்பது மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் இடங்களையும் வரைபடம் மூலம் பட்டியலிடுகிறது.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 About the MLA", mla.org, Modern Language Association, 9 July 2008, Web, 25 April 2009.
  2. "Modern Language Association of America", in "ACLS Member Learned Societies" (Directory), American Council of Learned Societies (ACLS), 2011, Web, 31 January 2011.
  3. "MLA Officers and Members of the Executive Council", Modern Language Association, MLA, 2011, World Wide Web, 21 January 2011.
  4. "eReviews: MLA International Bibliography", Library Journal, September 1, 2012

இணைப்புகள்[தொகு]