நர்கோனா அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நர்கோனா அரண்மனை

நர்கோனா அரண்மனை (Nargona Palace) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள தர்பங்காவில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை ராஜ் தர்பங்காவில் கட்டப்பட்ட கடைசி அரச அரண்மனையாகும்.

வரலாறு[தொகு]

1934 இல் பீகாரின் வடக்குப் பகுதியை உலுக்கிய நேபாள-பீகார் பூகம்பத்தில் அழிந்த முக்கிய நகரங்களில் தர்பங்கா நகரமும் ஒன்றாகும். கிட்டத்தட்ட முழு நகரமும் அழிந்து போனது. தர்பங்காவிலுள்ள அரண்மனைகளும் பெரும் சேதத்தை சந்தித்தன. மோதி மகால் அரண்மனை பூகம்பத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. ஆனந்த் பாக் அரண்மனை மற்றும் ராம் பாக் அரண்மனை கடுமையாக சேதமடைந்து நிலநடுக்கத்திற்குப் பிறகு மீண்டும் கட்டப்பட்டன. அந்த காலத்தில் தர்பங்காவை நிர்வகித்த மிதிலை பிரதேசத்தின் மகாராஜா காமேசுவர் சிங் என்ற பிராமண ஆட்சியாளர், பூகம்பத்தை எதிர்க்கும் தொழில்நுட்பத்துடன் புதிய அரண்மனையை கட்ட முடிவு செய்தார். [1] அரண்மனை கட்டப்பட்டபோது பூகம்பத்தை எதிர்க்கும் அம்சங்களை உள்ளடக்கிக் கட்டப்பட்டது. பூகம்பத்தைத் தாங்கும் திறன் 1988 இல் பீகாரில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டபோது நிரூபிக்கப்பட்டது. பூகம்பத்தை எதிர்க்கும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய இந்தியாவின் முதல் கட்டிடம் இதுவாகும்.

தற்போதைய நிலை[தொகு]

அரண்மனையும் அதனைச் சுற்றியுள்ள தோட்டம், பழத்தோட்டங்கள், மற்றும் ராஜ் தர்பங்காவின் தலைமை அலுவலக கட்டிடம் ஆகியவை 1972 இல் பீகார் அரசுக்கு ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக நன்கொடையாக வழங்கப்பட்டது. இப்போது லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம் என்றா பெயரில் இயங்கி வருகிறது. [2]

சான்றுகள்[தொகு]

  1. The Bihar Earthquake And The ராஜ் தர்பங்கா. Author - Kumar Ganganand Sinha. Publisher - ராஜ் தர்பங்கா. Year of Publication - 1936
  2. Anthropology of Ancient Hindu Kingdoms: A Study in Civilizational Perspective; Author - Makhan Jha
"https://ta.wikipedia.org/w/index.php?title=நர்கோனா_அரண்மனை&oldid=3789451" இலிருந்து மீள்விக்கப்பட்டது