உள்ளடக்கத்துக்குச் செல்

நமக் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நமக் ஏரி ஈரானில் உள்ள ஒரு உவர் ஏரி ஆகும். இது கும் நகரின் கிழக்கே சுமார் 100 கிமி தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 790 மீட்டர்கள் (2,590 அடி) உயரத்தில் உள்ளது.[1]

இந்த ஏரி பாராதெத்திஸ் கடலின் எஞ்சியப்பகுதி ஆகும். பாராதெத்திஸ் கடல் பிளைஸ்டோசீன் சகாப்தத்திலிருந்து உலரத் தொடங்கியது. இக்கடலின் மிச்சம் தான் நமக் ஏரி, ஊர்மியா ஏரி மற்றும் காஸ்பியன் கடல் ஆகியவை. நமக் ஏரியின் பரப்பளவு சுமார் 1880 சதுர கிலோ மிட்டர் (690 சதுர மைல்), ஆனால் இதில் பெரும்பாலான பகுதி வறண்டுவிட்டது. இந்த ஏரியில் நீர் 1 சதுர கி.மிக்கு மட்டுமே உள்ளது. இந்த ஏரியின் ஆழம் வெறும் 45 சென்டிமீட்டர்கள் (17.72 அங்) முதல் 1 மீட்டர் (39.37 அங்) வரை மட்டுமே உள்ளது. [2]

படம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நமக்_ஏரி&oldid=3809631" இலிருந்து மீள்விக்கப்பட்டது