நந்தினி பாஜ்பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்தினி பாஜ்பாய்
பிறப்புமீரட், உத்திர பிரதேசம், இந்தியா
பணிஎழுத்தாளர்
அறியப்படுவது" ரெட் டர்பன் ஒயிட் ஹார்ஸ்" (2013) "ஸ்டார்கர்ஸ்டு" (2013) "ரிஷி அண்டு தெ கார்மிக் கேட் "(2015)

நந்தினி பாஜ்பாய் (Nandini Bajpai) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். இவரது முதல் புதினமான "ரெட் டர்பன் ஒயிட் ஹார்ஸ்: மை சிஸ்டர்ஸ் ஹரிகேன் வெட்டிங் 2013 இல் ஸ்காலஸ்டிக் இந்தியாவினால் வெளியிடப்பட்டது. [1] [2] ஸ்டார்கர்ஸ்டு எனும் புதினம் , ரூபா பதிப்பகத்தால் நவம்பர் 2013 இல் வெளியிடப்பட்டது. இவரது ரிஷி அண்ட் கர்மிக் கேட் எனும் நூல் ரூபா பதிப்பதகத்தால் செப்டம்பர் 2015 இல் வெளியிடப்பட்டது. [3] [4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

நந்தினி சவுகான் உத்திரபிரதேசம் மீரட்டில் ராஜ்புத் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஓர் இராணுவ அதிகாரியாக இருந்தார், இவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர். [5] நான்கு குழந்தைகளில் இளையவரான அனுஜா சவுகான் பரவலாக அறியபடும் எழுத்தாளார் ஆவார். [6] [7] நந்தினி தனது குடும்பத்துடன் 1991 இல் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார். 1994 ஆம் ஆண்டில், திருமணத்திற்குப் பிறகு, இவர் அமெரிக்கா சென்றார். இவர் தனது முதல் குழந்தை பிறக்கும் வரை பாஸ்டனில் உள்ள ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸில் பணிபுரிந்தார். அதன்பிறகு இவர் பல சமூக மற்றும் விலங்கு மீட்புக் குழுக்களுடன் தன்னார்வத் தொண்டு செய்வதில் ஈடுபட்டார். இவர் 2015 ஆம் ஆண்டில், ஆண்டின் சிறந்த இந்திய-நியூ இங்கிலாந்து பெண் எனும் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். [8]

சான்றுகள்[தொகு]

  1. Vishav (3 July 2013). "The Age of Young Adults". தி டெக்கன் குரோனிக்கள். http://archives.deccanchronicle.com/130703/lifestyle-booksart/article/age-young-adults. பார்த்த நாள்: 26 August 2015. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Hurricane Wedding". இந்தியா டுடே. 15 July 2013. http://indiatoday.intoday.in/story/vegetarians-are-treated-as-second-class-citizens/1/286873.html. பார்த்த நாள்: 24 August 2015. 
  3. "Saving the Book of Life". தி இந்து. 21 January 2016. http://www.thehindu.com/features/kids/Saving-the-Book-of-Life/article14011997.ece. பார்த்த நாள்: 21 January 2016. 
  4. "Nandini Bajpai: A Knack for Writing Young Adult Fiction". India New England. 13 August 2014. http://www.indianewengland.com/ME2/dirmod.asp?sid=&nm=&type=Publishing&mod=Publications%3A%3AArticle&mid=8F3A7027421841978F18BE895F87F791&tier=4&id=E9107A41708B4DCB876DFA2A57E855C1. பார்த்த நாள்: 24 August 2015. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. Gianani, Kareena (7 July 2013). "Author by the minute: Nandini Bajpai". Mid Day Mumbai. http://www.mid-day.com/articles/author-by-the-minute-nandini-bajpai-author-of-red-turban-white-horse/221460. பார்த்த நாள்: 24 August 2015. 
  6. Venkatraman, Janane (8 July 2013). "Band, Bajaa, Books?". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/cities/chennai/Band-Bajaa-Books/2013/07/08/article1672387.ece. பார்த்த நாள்: 24 August 2015. 
  7. "Limelight: Sister Act". The Telegraph (Calcutta). 16 June 2013. http://www.telegraphindia.com/1130616/jsp/7days/story_17012652.jsp#.VduOZnvDFpk. பார்த்த நாள்: 24 August 2015. 
  8. "Author Nandini Bajpai Dabbles in Young Adult Fiction". India New England. 22 July 2015. http://www.indianewengland.com/ME2/dirmod.asp?sid=60CECAF0782246D3A7AA2EB6048D53C2&nm=Archive&type=Publishing&mod=Publications%3A%3AArticle&mid=8F3A7027421841978F18BE895F87F791&tier=4&id=F5A5486EB61E42B4B699B7ED164FE2B4. பார்த்த நாள்: 24 August 2015. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தினி_பாஜ்பாய்&oldid=3318559" இலிருந்து மீள்விக்கப்பட்டது