நந்தலால் சௌவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்தலால் சௌத்ரி
Nand Lal Chaudhary
பீகார் சட்டப் பேரவை
பதவியில்
1980–1990
முன்னவர் துளசி ராம்Tulsi Ram
பின்வந்தவர் சக்தேவ் பாசுவான்
தொகுதி பிப்ரா சட்டமன்றத் தொகுதி (கிழக்கு சம்பாரண் மாவட்டம்)
தனிநபர் தகவல்
பிறப்பு அண். 1936
இறப்பு 14 சனவரி 2020 (வயது 84)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

நந்தலால் சௌவுத்ரி (Nand Lal Chaudhary) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1936 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். பீகாரைச் சேர்ந்த இவர் பீகார் மாநில சட்டப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய காங்கிரசின் கிழக்கு சம்பரான் பிரிவின் தலைவராகவும் பணியாற்றினார்

அரசியல்[தொகு]

நந்தலால் சௌத்ரி 1980 ஆம் ஆண்டில் பிப்ரா, பூர்வி சம்பரானில் இருந்து பீகார் சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [1] 1985 ஆம் ஆண்டிலும் [2] இவர் மீண்டும் இதே தொகுதிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் கிழக்கு சம்பாரண் பிரிவின் தலைவராக பணியாற்றினார்.

நந்தலால் சௌத்ரி 2020 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று தனது 84 ஆவது வயதில் இறந்தார் [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தலால்_சௌவுத்ரி&oldid=3831753" இருந்து மீள்விக்கப்பட்டது