நத்தாலி உறோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நத்தாலி ஆன் உறோ (Natalie Ann Roe) ஒரு சோதனை துகள் இயற்பியலாளரும் நோக்கீட்டு அண்டவியலாளரும் இலாரன்சு பெர்க்கேலி தேசிய ஆய்வகத்தில் இயற்பியல் அறிவியல் பகுதியின் இணை ஆய்வக இயக்குநரும் ஆவார்.[1] இதற்கு முன்பு அவர் எட்டு ஆண்டுகள் இயற்பியல் பிரிவின் இயக்குநராக இருந்தார்.[2][3] இஅவரது விதிவிலக்கான அறிவியல் வாழ்க்கை, பங்களிப்புகளுக்காக அமெரிக்க இயற்பியல் கழக, அறிவியல் முன்னேர்ரத்துக்கான அமெரிக்கக் கழக ஆய்வுறுப்பினர் ஆனார்.

கல்வி[தொகு]

இவர் 1981 இல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலை பட்டமும் , 1989 இல் சுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 1989 ஆம் ஆண்டில் இலாரன்சு பெர்க்கேலி தேசிய ஆய்வகத்தில் முதுமுனைவராகச் சேர்ந்தார் , அங்கு அவர் தற்போது இயற்பியல் அறிவியல் பகுதியின் இணை ஆய்வக இயக்குநராக உள்ளார்.[4]

ஆராய்ச்சி தொழிலும் கூட்டுறவும்[தொகு]

இவர் துகள் இயற்பியல் ஆராய்ச்சி வாழ்க்கையில் SLAC பெர்மி தேசிய முடிக்கி ஆய்வகங்களில் செய்யும் முடுக்கி அடிப்படையிலான செய்முறைகளில் அணுவகத் துகள் இயல்புகளின் பகுப்பாய்வு அடங்கும். அவரது அண்டவியல் ஆராய்ச்சி அரிசோனா - நியூ மெக்ஸிகோ, சிலியை தளமாகக் கொண்ட தொலைநோக்கிகளைப் பயன்படுத்திச் செய்யும் ஆய்வுகளை உள்ளடக்கியுள்ளது , இதில் இருண்ட ஆற்றலை ஆய்வுக்கு , அடர்துகள் அலைவுகள் கதிர்நிரல்பதிவு அளக்கை (BOSS), இருண்ட ஆற்றலலள்க்கை (DES), இருண்ட ஆற்றல் கதிர்நிரல்பதிவுக் கருவி (DESI) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.[5][6]

இவர் தனது இளங்கலை பட்டப்படிப்பில் பேராசிரியர் கார்லோ உரூபியாவுடன் உயர் ஆற்றல் இயற்பியலில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் , இது யுஏ 1 செய்முறையில் ஒரு ஆண்டுக்குச் செர்னில் பணிபுரிய வழிவகுத்தது.[4] செர்னில் அடைந்த இந்தப் பட்டறிவு துகள் இயற்பியலில் அவரது இறுதி வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.[7] தனது முனைவர் பட்டத்தின் போது அவர் SLAC.கில் பிறழ்வுறு ஒற்றை ஒளியனைத் தேடலானார்.[8]

1989 ஆம் ஆண்டில் இலாரன்சு பெர்க்கேலி தேசிய ஆய்வகத்தில் பெர்மி ஆய்வகத்தில் டி0 செய்முறையில் முதுமுனைவராகத் தொடங்கினார். அவர் கருவியியலில் வலுவான ஆர்வத்தைக் கொண்டு, D0 இல் மின்காந்த கலோரிமானியை உருவாக்கினார். பெர்மி ஆய்வக தெவாட்ரானில் W, Z போசான்களின் ஆக்கமும் சிதைவும் பற்றிய பகுப்பாய்வைச் செய்தார் , 1993 முதல் 2005 வரை SLAC இல் பாபர் செய்முறைக்குச் சிலிக்கான் சுழிப்பு கண்கானிப்பியின் வடிவமைப்புக்கும் கட்டுமானத்திற்கும் தலைமை தாங்கினார். மேலும், இவர்இருண்ட ஆற்றலை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட BOSS செய்முறையின் கருவி அறிவியலாளரும் ஆவார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக LBNL நுண்ணமைப்பு ஆய்வகத்தின் குழுத் தலைவராக இருந்த இவர் , DES, BOSS ஆகிய இரண்டிற்கும் அறிவியல் சிசிடிகளை உருவாக்குவதற்கு பொறுப்பாக இருந்தார்.[9]

உயர் ஆற்றல் இயற்பியல் அறிவுரைக் குழு (HEPAP), பார்வையாளர்களின் தேசிய அறிவியல் அறக்கட்டளை இயற்பியல் பிரிவு குழு , FNAL இயற்பியல் அறிவுரைக் குழு (PAC), நொதுவி(நியூட்ரினோ) அறிவியல் அறிவுரைக் குழு உள்ளிட்ட பல சமூகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார்.[10][11][12] அவர் 2007 முதல் 2009 வரை எதிர்கால முடுக்கிகளுக்கான பன்னாட்டுக் குழு (ஐசிஎஃப்ஏ), DESY அறிவியல் மன்ற உறுப்பினராகவும் , செர்ன் அறிவியல் கொள்கை குழு, பல தேசிய, பன்னாட்டு அவைகளிலும் பணியாற்றியுள்ளார்.[13][14][15]

பெர்க்கேலி ஆய்வக பெண் அறிவியலாளர்கள், பொறியாளர்களின் மன்ற நிறுவன உறுப்பினரான நட்டாலி , ஆய்வகத்தில் பன்முகத்தன்மை உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான ஆய்வக அளவிலான முயற்சியை வழிநடத்துகிறார்.[16]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

பாபர் சிலிக்கான் சுழிப்பு காணி வடிவமைப்பு, கட்டுமானத்தில் தலைமை தாங்கியதற்காகவும் , பிபி கலப்பு அலைவுகள்,பி மேசான் சிதைவுகளில் சிபி மீறல்கள் பற்றிய ஆய்வுகளுக்காகவும் 2001 ஆம் ஆண்டில் அமெரிக்க இயற்பியல் கழக ஆய்வுறுப்பினராக நட்டாலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[17] அறிவியல், தொழில்நுட்பத்தில் அவர் செய்த விலைமதிப்பற்ற பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் , 2020 ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க கழகத்தின் ஆய்வுறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[18][19]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Natalie Roe Named Associate Director for Physical Sciences". 15 July 2020.
  2. "Natalie Roe, Physics Division Director, Lawrence Berkeley National Lab". https://www.youtube.com/watch?v=OJUzpE7oI80. 
  3. "Roe Appointed as Director of Physics Division". today.lbl.gov. பார்க்கப்பட்ட நாள் 2020-05-07.
  4. 4.0 4.1 "Lab Leadership" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-03."Lab Leadership". Retrieved 2020-11-03.
  5. "Six Berkeley Lab scientists named AAAS fellows". EurekAlert! (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-07.
  6. "INSPIRE". inspirehep.net. பார்க்கப்பட்ட நாள் 2020-05-07.
  7. "Natalie Roe: How an Early Boost Made a Big Difference". diversity.lbl.gov. பார்க்கப்பட்ட நாள் 2020-05-07.
  8. Hearty, C.; Rothberg, J. E.; Young, K. K.; Johnson, A. S.; Whitaker, J. S.; Wilson, R. J.; Bartha, G.; Burke, D. L. et al. (1989-06-01). "Search for the anomalous production of single photons in e+ e- annihilation at √s =29 GeV". Physical Review D 39 (11): 3207–3226. doi:10.1103/PhysRevD.39.3207. பப்மெட்:9959566. Bibcode: 1989PhRvD..39.3207H. https://link.aps.org/doi/10.1103/PhysRevD.39.3207. 
  9. "BOSS: Baryon Oscillation Spectroscopic Survey". cosmology.lbl.gov. பார்க்கப்பட்ட நாள் 2020-05-07.
  10. "High energy physics advisory panel to the U.S. department of energy and national science foundation public meeting minutes". https://science.osti.gov/-/media/hep/hepap/pdf/201805/HEPAP_May_2018_Minutes.pdf?la=en&hash=F34CB2062B1B2788D539E5509136978355DA53C3. 
  11. Lockyer, Nigel. "Physics Advisory Committee | News" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-13.
  12. "Nominating Committee". www.aps.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-13.
  13. "Membership | ICFA" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-13.
  14. "Membership of the Scientific Policy Committee | CERN Council". council.web.cern.ch. பார்க்கப்பட்ட நாள் 2020-05-13.
  15. "Women @ The Lab - Natalie Roe, Ph.D." sites.google.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-13.
  16. "Women Scientists & Engineers Council Looks Ahead to New Workplace Initiatives". diversity.lbl.gov. பார்க்கப்பட்ட நாள் 2020-05-13.
  17. "APS Fellowship". www.aps.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-07.
  18. "AAAS Announces Leading Scientists Elected as 2019 Fellows". American Association for the Advancement of Science (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-07.
  19. Duque, Theresa (2019-11-26). "Six Berkeley Lab Scientists Named 2019 AAAS Fellows". News Center (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-07.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நத்தாலி_உறோ&oldid=3782045" இலிருந்து மீள்விக்கப்பட்டது