நட்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

'உயிர்காப்பான் தோழன்' என்பது நட்பின் நலத்தை நன்கு புலப்படுத்துவதாகும். இதையே வள்ளுவர் பெருமான் நட்பு ஒருவருக்கு வேண்டிய எல்லா பொருளிலும் சிறந்தது. அதைவிட அரிய பொருள் உலகில் இல்லை. அந்நட்பாகிய பொருளைக்கண்டு பகைவரும் அஞ்சுவர் எனக் கூறுகிறார்.

உண்மை நட்பு 
    உண்மை நட்பு  உணர்வில் ஊறுவது பழக்கத்தால் அமைவது அன்று. காணும்போது முகத்தைவிட அகம் மலர்வதே உண்மை நட்பாகும். 'முகநக நட்பது' என்னும் குறள் இதை நன்கு விளக்குகிறது.

உண்மை நண்பரின் சிறப்பு:

நல்ல நூலைப் படிக்க படிக்க இன்பந்தரும். நல்ல நண்பரும் பழகபழக இன்பமுறுவர். அறிவுடையார் நட்பு வளர்பிறை போல் வளரும். அறிவிலார் நட்பு தேய்பிறை போலு தேயும்.

நல்லநண்பரைப் பெற்றபின், அவரைக் காத்துக் கொள்ளல் நம் கடமையாகும். அவரிடமுள்ள சிறு குற்றத்தைக் கருதி நல்லவர் நட்பை இழக்கக்கூடாது.

மேற்கோள் : கட்டுரைக் களஞ்சியம்

           தி. இராசகோபாலன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நட்பு&oldid=2333329" இருந்து மீள்விக்கப்பட்டது