பேச்சு:நட்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனுசரிப்பு - இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள சூழலுக்குத் தமிழில் என்ன? ஒத்துப் போதல், விட்டுக்கொடுத்தல்?--ரவி 17:13, 24 மே 2008 (UTC)[பதிலளி]

இங்கே இணக்க உணர்வு, இசைவுடைமை என்று கூறலாம். அனுசரித்தல் என்பது ஒருவருக்கு ஒருவர் இணங்கி, இசைஞ்சுகொடுத்துச் செல்வது. "நீ தான் கொஞ்சம் இசைஞ்சு கொடேன்", "அவந்தான் இவ்வளவு கெஞ்சறானே, நீதான் கொஞ்சம் இசைவா ஒரு சொல்லு சொல்லேன்!" ஒத்துப் போதல், இசைஞ்சு கொடுத்தல், இசைவா பேசுதல், இணக்கமாப் போதல் என்னும் சொல்லாட்சிகள் அருகி வருகின்றன (ஒத்துப் போதல் இன்னும் நல்ல வழக்கில் உள்ளது). அனுசரி என்னும் சொல்லாட்சி 2-5% மக்களிடையே மட்டுமதான் உள்ளது, மிஞ்சி மிஞ்சிப் போனால் 10% சொல்லலாம். மற்றவர்களிடையே "விட்டுக்கொடுத்தல்" போன்ற சொல்லாட்சிகள் பெருவழக்கு.ஒத்துப் போயேன், விட்டுக் கொடேன். "அவங்க சொல்றதை கேட்டு ஒத்து நடக்கணும்" (அதாவது "அனுசரித்து நடந்துக்கணும்")--செல்வா 17:27, 24 மே 2008 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நட்பு&oldid=284638" இலிருந்து மீள்விக்கப்பட்டது