நடுவெழுத்தலங்காரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாடல்களில் வரும் அணியை அலங்காரம் என்னும் வடசொல்லால் குறிப்பிடலாயினர். தொல்காப்பியம் இந்த அணி பற்றி உவம இயல் என்னும் தனி இயலில் கூறுகிறது. தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்னும் நூல்கள் தோன்றி வடமொழி நெறியைப் பின்பற்றி பாடல்களில் அமையும் அணிகள் பற்றிக் கூறுகின்றன. அந்த நூல்களில் கூறப்படும் அணிகளுக்குத் தமிழில் மேற்கோள் பாடல் இல்லாதபோது, அந்த அணியை விளக்க உதவும் புதிய பாடல்களை உருவாக்கி அந்த நூல்கள் அணிகளை விளக்குகின்றன.

பண்டைய இலக்கியங்களில் பொருளை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் வகையில் அணிகள் பயன்படுத்தப்பட்டன. பிற்காலத்தில் மொழிவளம் காட்டும் வகையில் சொல்லணிகள் தமிழில் புகுந்தன. அவற்றில் ஒன்றுதான் இங்குக் காட்டப்படும் நடு எழுத்து அலங்காரம்.

நடு எழுத்து அலங்காரம் [1][தொகு]

சீதாராமன் என்னும் வள்ளலே கடன் தொல்லையால் உன்னிடம் வந்திருக்கிறேன். என் கவலையைப் போக்க வேண்டும். என்று புலவர் இராமச்சந்திரக் கவிராயர் வேண்டும் பாடல் ஒன்று இந்த அணி கொண்டதாக அமைந்துள்ளது.

பாடல் விளக்கம்[தொகு]

அத்திரம்

பகழி

வேலாவலயம்

கடல்

இராசி யொன்றிற்கு அமைந்த பெயர்

கன்னி

மூன்றினிடை அக்கரத்தால்

இவை மூன்றின் இடையிலுள்ள எழுத்தால் - கடன்

மெத்த நடுக்குற்று உனை வந்தடைந்தேன்

நான் வாங்கிய கடனைத் தீர்க்க முடியாமல் நடுங்கி உன்னை வந்தடைந்தேன்

இந்த விதனம் அகற்றிடு

இந்தக் கவலையைப் போக்குக

மற்றை எழுத்து ஓராறில்

பழி கல் கனி

பத்து உடையானைத் தடிந்து

பழிபட்டுக் கல்லாகிய க(ன்)னி அகலிகையை,

பெண்ணாச் செய்து பரிவின் நுகர்வோன்

சபரி கொடுத்த கனியைத் தின்ற இராமனின்

இருதாள் பணிந்து போற்றும் சித்தசனே!

மனத்திட்பம் கொண்டவனே

தெளிய சிங்கன் தவத்தில் தோன்றும் சீதாராம ப்ரபல தியாகவானே

மனத் தெளிவு பெற்ற சிங்கன் செய்த தவத்தின் பயனாக அவனுக்கு மகனாகத் தோன்றிய சீதாரான் என்னும் பெயர் கொண்ட பிரபல தியாகவானே!

பாடல்[தொகு]

அத்திரம் வேலாவலயம் இராசி யொன்றிற்

கமைந்த பெயர் மூன்றினிடை யக்கரத்தால்

மெத்த நடுக்குற்று உனை வந்தடைந்தேன் இந்த

விதனம் அகற்றிடு மற்றை எழுத்து ஓராறில்

பத்து உடையானைத் தடிந்து பெண்ணாச் செய்து

பரிவின் நுகர்வோன் இருதாள் பணிந்து போற்றும்

சித்தசனே தெளிய சிங்கன் தவத்தில் தோன்றுஞ்

சீதாராம ப்ரபல தியாகவானே. (24)

மேற்கோள்[தொகு]

  1. தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர் பாடிய தனிப் பாடல்கள், பக்கம் 124
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுவெழுத்தலங்காரம்&oldid=3797421" இலிருந்து மீள்விக்கப்பட்டது