தோரா தகார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Nine women in dresses standing in front of a wrought iron fence behind which is a building with two open windows
1921 அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச அமைப்பின் நிர்வாகக் குழு: இடமிருந்து வலமாக, முன்: கொர்னேலியா ரமோண்ட்-ஹிர்ஷ்மேன், கேப்ரியல் டுசென், லிடா குஸ்டாவா ஹெய்மன், ஹெர்ட்ஸ்கா, ஜேன் ஆடம்ஸ், கேத்தரின் மார்ஷல், கெர்ட்ரூட் பேர் . பின்: எமிலி கிரீன் பால்ச் மற்றும் தோரா டவுகார்ட் .

தியோடோரா (தோரா) பிரடெரிக்கே மேரி தகார்ட் ( Theodora (Thora) Frederikke Marie Daugaard ) (22 அக்டோபர் 1874 - 28 ஜூன் 1951) டென்மார்க்கைச் சேர்ந்த பெண்களின் உரிமைகள் ஆர்வலரும், அமைதிவாதியும், ஆசிரியரும் மற்றும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். 1915 ஆம் ஆண்டு டென் ஹாக்கில் நடந்த சர்வதேச மகளிர் மாநாட்டில் கிளாரா டைப்ஜெர்க்குடன் கலந்து கொண்டார். அதன்பிறகு இவர் டான்ஸ்கே கிவிண்டர்ஸ் பிரெட்ஸ்கேட் அல்லது டென்மார்க பெண்கள் அமைதி சங்கிலியை நிறுவி தலைமை தாங்கினார். இது அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச அமைப்பின் டென்மார்க்கின் கிளையாக மாறியது. இரண்டாம் உலகப் போரின்போது நாட்சி ஜெர்மனிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட டென்மார்க்கில் யூதர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கான உதவிகளை ஏற்பாடு செய்ததற்காகவும் இவர் நினைவுகூரப்படுகிறார். [1] [2]

சுயசரிதை[தொகு]

விடுதிக் காப்பாளர் பெடர் ஜோஹன்னஸ் ஜென்சன் (1841-1903) மற்றும் பெட்ரின் தகார்ட் (1848-1925) ஆகியோரின் மகளாக 22 அக்டோபர் 1874 இல் ஹோப்ரோ, ஜூட்லாந்திற்கு அருகிலுள்ள ஸ்டோர் ஆர்டனில் பிறந்தார். 1903 டென்மார்க் மகளிர் சங்கத்தால் நடத்தப்பட்ட பத்திரிகைக்கு ஆசிரியர் செயலாளராகவும், அவர்களின் புதிய அலுவலகத்தின் வணிக மேலாளராகவும் பணியமர்த்தப்பட்டார். எஸ்தர் கார்ஸ்டென்சன், கைரித் லெம்சே மற்றும் ஆஸ்ட்ரிட் ஸ்டாம்ப் பெடர்சன் ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்த இவர், அமைப்பின் தேர்தல் குழுவில் சேர்ந்தார். 1915 ஆம் ஆண்டு வரை டென்மார்க் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெறும் வரை அதன் சர்வதேச செயலாளராகவும் இருந்தார். [1]

அதன்பிறகு, இவர் தனது முயற்சிகளை முக்கியமாக அமைதி இயக்கத்திற்காக அர்ப்பணித்தார். [1] 1915 ஆம் ஆண்டு ஹாக்கில் நடந்த சர்வதேச பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அதில் "எங்களுக்கு இனி போர் வேண்டாம். நாங்கள் பெண்கள் போரினால் பாதுகாக்கப்படுகிறோம் என்பதை இனி விளக்க விரும்பவில்லை. இல்லை, நாங்கள் போரினால் கற்பழிக்கப்பட்டோம்!" என அறிவித்தார். [3] அடுத்த ஆண்டு, டென்மார்க் பெண்கள் அமைதி சங்கிலியை நிறுவினார். [4] 1920 முதல் 1941 வரை, சங்கத்தின் தலைவராக இருந்தபோது உறுப்பினர் எண்ணிக்கையை 15,000 ஆக உயர்த்தினார். [1]

1915 இல் நடந்த பெண்கள் சர்வதேச மாநாடு . இடமிருந்து வலமாக:1. லூசி தூமையன் - ஆர்மீனியா, 2. லியோபோல்டின் குல்கா, 3. லாரா ஹியூஸ் - கனடா, 4. ரோசிகா ஸ்விம்மர் - ஹங்கேரி, 5. அனிகா ஆக்ஸ்பர்க் - ஜெர்மனி, 6. ஜேன் ஆடம்ஸ் - அமெரிக்கா, 7. என் ஹியூஜின் ஹேமர், 8. அலெட்டா ஜேக்கப்ஸ் - நெதர்லாந்து, 9. கிறிஸ்டல் மேக்மில்லன் - யுகே, 10. ரோசா ஜெனோனி - இத்தாலி, 11. அன்னா கிளெமன் - சுவீடன், 12. தோரா தகார்ட் - டென்மார்க், 13. லூயிஸ் கெய்ல்ஹாவ் - நார்வே

இறப்பு[தொகு]

தோரா தகார்ட் 28 ஜூன் 1951 அன்று ஹோல்ஸ்டெப்ரோவில் இறந்தார்.[5][6]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Lous, Eva. "Thora Daugaard (1874 - 1951)" (in Danish). Kvinfo. பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Historie". Kvindernes Internationale Liga for Fred og Frihed. பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.
  3. "Thora Daugaard". Women Peacemakers. பார்க்கப்பட்ட நாள் 4 January 2019.
  4. "12. Thora Daugaard" (PDF). WILPF. 2015. Archived from the original (PDF) on 6 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 January 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Lous, Eva. "Thora Daugaard (1874 - 1951)" (in Danish). Kvinfo. பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "Historie". Kvindernes Internationale Liga for Fred og Frihed. பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரா_தகார்ட்&oldid=3667250" இலிருந்து மீள்விக்கப்பட்டது