தோரத்தி வவுகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரத்தி வவுகான்
Dorothy Vaughan
தோரத்தி வவுகான்
பிறப்புதோரத்தி ஜான்சன்
(1910-09-20)செப்டம்பர் 20, 1910
கன்சாசு நகர், முசிசோரி, அமெரிக்கா
இறப்புநவம்பர் 10, 2008(2008-11-10) (அகவை 98)
ஆம்ப்டன், வர்ஜீனியா அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைகணிதவியல்
பணியிடங்கள்நாசா, இலாங்கிளே ஆராய்ச்சி மையம்
கல்வி கற்ற இடங்கள்வில்பர்போர்சு பல்கலைக்கழகம், 1929
துணைவர்ஓவார்டு வவுகான்
பிள்ளைகள்6

தோரத்தி ஜான்சன் வவுகான் (Dorothy Johnson Vaughan) (செப்டம்பர் 20, 1910 – நவம்பர் 10, 2008) ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கக் கணிதவியலாளரும் மாந்தக் கணிப்பாளரும் ஆவார். இவர் வர்ஜீனியாவில் உள்ள ஆம்ப்டனில் அமைந்த நாசாவின் இளாங்கிளே ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்தார். இவர் 1949 இல் மேற்குப் புலக் கணிப்பாளரின் பொறுப்புநிலை மேற்பார்வையாளர் ஆனார். இவர்தான் இம்மையத்தில் பணியாளருக்கான மேற்பார்வைப் பணியில் ஈடுபட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணியாவார்.

பின்னர் இவர் அப்பதவியில் அலுவல் முறையாகப் பணி உயர்வு பெற்று அமர்ந்தார். இவர் அங்கு 29 ஆண்டுகள் பணி செய்தபோது 1960 களில் போர்ட்டிராம் நிரலாக்க மொழியைதான் கற்றதோடு தன் பணியாளருக்கும் கற்பித்து எந்திரவகைக் கணினிகளை அறிமுகப்படுத்தினார். இவர் பின்னர் இளாங்கிளே ஆராய்ச்சி மையப் பகுப்பாய்வு, கணிப்புத் துறையின் நிரலாக்கப் பிரிவுக்குத் தலைமையும் ஏற்றார்.

மறைநிலை ஆளுமைகள்: அமெரிக்கக் கனவும் விண்வெளிப் போட்டியில் உதவிய கருப்பினப் பெண் கணிதவியலாளர்களும் (2016), நாசாவில் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தாக்கம் விளைவித்த ஆப்பிரிக்க அமெரிக்கக் கருப்பினப் பெண் கணிதவியலாளர்களும் பொறியாளர்களும் பற்றிய வரலாறு, எனும் மார்கோட் இலீ செட்டெர்லி எழுதிய நூலில் விவரித்த ஆராய்ச்சியாளர்களில் தோரத்தி வவுகானும் ஒருவர் ஆவார்.

இளமை[தொகு]

வாழ்க்கைப்பணி[தொகு]

பிந்தைய வாழ்நாள்[தொகு]

மக்கள் பண்பாட்டில்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • Melfi, Theodore (2016-12-25), Hidden Figures, பார்க்கப்பட்ட நாள் November 22, 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரத்தி_வவுகான்&oldid=3759616" இலிருந்து மீள்விக்கப்பட்டது