தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், தடியன் குடிசை
Appearance
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், தடியன் குடிசை (Horticulture Research Station, Thadiyankudisai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வட்டத்திலுள்ள தடியன் குடிசையில் 1957 ஆம் ஆண்டில் மலை வாழை ஆராய்ச்சி நிலையமாக தமிழக அரசால் நிறுவப்பட்டது.[1] பின்பு, 1972 ஆம் ஆண்டில் தேசிய வேளாண் ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையமாக மாற்றப்பட்டு, பின் மண்டல ஆராய்ச்சி நிலையமாக மலைப் பகுதி மண்டலங்களுக்காக மாற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒன்றியத்தில் அமைந்துள்ள தடியன் குடிசை கிராமம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான பழனி கீழ் மலைத்தொடரில் இருப்பதாக வகைப்படுத்தப்படுகிறது.
நோக்கங்கள்
[தொகு]- நறுமணப் பயிர் மற்றும் வாசனைப் பயிர், மலைத் தோட்டப் பயிர் போன்றவற்றை இப்பகுதி மக்களின் சாகுபடி பயிர் முறைகளுக்கான உரிய தேவையைப் பூர்த்தி செய்தல்.
- மலை வாழை, மிளகு, அவகோடா மற்றும் மெரக்காய் போன்ற பயிர்களின் புதிய நுட்பங்களை சாகுபடிக்கேற்ப கண்டறிதல்
- குறு விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேளாண் சாகுபடி முறை பற்றி பயிற்சியளித்தல்.
- உயிர்க் கட்டுப்பாடு மருந்துகளை உற்பத்தி செய்து விநியோகித்தல்
- சிறந்த உற்பத்தித் தன்மையுடைய நடவுக் கன்றுகளை வழங்குதல்
முக்கியப் பயிர்கள்
[தொகு]- மிளகு
- ஆரஞ்சு (கொடி)
- மெரக்காய்
- செளசெள
- வெண்ணிலா
- மலை வாழை
- அவகோடா
- இலவங்கம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "About Us :: Research Stations", agritech.tnau.ac.in, பார்க்கப்பட்ட நாள் 2024-01-21
உசாத்துணை
[தொகு]- Dindugal District Collectors Office, retrieved 4/12/2007 About Dindugal District.
- http://www.icar.org.in/en/aboutus.htm