தொழிற்சாலை கருநிறமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
typical
melanic
Odontopera bidentata, ஓடொன்டொபெரா பைடென்டேடா(வரிச்சுழி காட்டுச்செட் அந்துப்பூச்சி) , பொதுவானது, நிறமி மாற்றமடைந்தது. The dark form became common in polluted areas after the தொழிற்புரட்சி.[1]

தொழிற்சாலைக் கருநிறமி (Industrial melanism) என்பது உயிரிகளின், குறிப்பாக கணுக்காலிகளின், தோல் நிறத்தில் ஏற்பட்ட ஒரு பரிணாம விளைவு ஆகும். முன்பு வெளிர் நிறங்களில் இருந்த இவற்றின் உடல், தொழிற்சாலை மாசுக்களால் அடர் கருநிறத்தில் மாறிவிட்டன.

கந்தக டைஆக்சைடு மற்றும் படிந்த புகைக்கரியே இவற்றின் இந்த நிற மாற்றத்திற்கு காரணமாகும். கந்தக டைஆக்சைடானது மரப்பட்டைகளில் உள்ள இலைக்கன்களைக் கொன்று மரங்களை வெறுமனே ஒரு பாதுகாப்பற்ற தன்மைக்கு கொண்டு வந்து விடும். அதே வேளையில் சுத்தமான பிரதேசங்களில் இந்த மரப்பட்டைகள் அடர்த்தியாக பலவிதமான அமைப்புகளில் மரத்தைப் பாதுகாக்கும் தன்மை கொண்டதாகக் காணப்படும். அதே வேளையில் புகைக்கரி, மரத்தின் பட்டையின் நிறத்தை அதிக கருமை நிறமுள்ளதாக மாற்றுகிறது.

அடர் நிறமாக்கப்பட்ட நிறமிகள், மாசுபடுத்தப் பட்ட பிரதேசங்களில் வாழும் தகவமைப்புத்தன்மை கொண்டதாகக் காணப் படுகிறது. ஏனென்றால் இதன் உருமறைப்பு மாசு படுத்தப்பட்ட பிரதேசங்களுக்குப் பொருந்தும் தன்மை உள்ளதாகக் காணப்படுகிறது. பெர்னார்ட் கெட்டில்வெல் என்பவரால் அதிக அளவு ஆராய்ச்சி செய்யப் பட்ட இந்த நிறமி மாற்றமானது டார்வின் பரிணாமக் கொள்கைக்கு சிறந்த கற்பித்தல் எடுத்துக்காட்டாகும். இவைகள் தோற்றப் பரிணாம வேறுபாட்டால் உயிரிகள் பெறும் வேறுபட்ட தகவமைப்பு மற்றும் வேறுபட்ட இன பெருக்க முறைமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.[2] கெட்டில்வெல்லின் ஆராய்ச்சியானது விலங்கியலாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் ஜூடித் ஹூப்பர் போன்றவர்களின் சவாலை சந்தித்தது. ஆனால் பிற்பாடு அநேக ஆராய்ச்சியாளர்கள் கெட்டில்வெல்லின் ஆராய்ச்சியைச் சரி என நிலைநிறுத்தினர்.[3]

இந்த நிகழ்வு அதிக அளவு வண்ணத்துப் பூச்சிகளிலும் அந்துப் பூச்சிகளிலும் அதிக அளவு பரவலாகக் காணப் படுகிறது. எழுபதுக்கும் மேற்பட்ட இனங்களில் இந்த நிகழ்வு காணப் படுகிறது. எடுத்துக் காட்டாக ஓடொன்டொபெரா பைடென்டேடா(வரிச்சுழி அந்துப்பூச்சி) மற்றும் லைமன்ட்ரியா மோனச்சா(கரு வளைவு ). ஆனால் அதிக அளவு ஆய்விற்காக எடுத்துக் கொள்ளப் பட்டது மிளகு அந்துப் பூச்சி ஆகும். இந்த நிகழ்வு சில வண்டு இனங்களிலும் காணப் படுகிறது. அடலியா பைபங்க்டாடா என்ற இருபுள்ளி லேடிபர்ட்(செந்நிற கருபுள்ளி கொண்ட வட்ட வகை வண்டு) வண்டில் இது காணப் படுகிறது. இவ்வகை வண்டு எச்சரிப்பு வண்ணம் கொண்டுள்ளதால் இதற்கு சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் உருமறைப்பு தேவையில்லை. இயற்கை வழியில் மேற்கொள்ளப் படும் சோதனையில் சுற்றுச் சூழல் மாசு குறைக்கப் படும்போது இந்த நிறமிகளும் தங்கள் அடர் நிறத்தை இழக்கின்றன எனவே தான் அவைகளுக்கு உருமறைப்பு தேவையில்லை என அறியப் பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலை மாசு தொடர்புடைய பிற நிகழ்வுகளும் எடுத்துரைக்கப் பட்டுள்ளன அவையாவன மாசுபடுதலுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, மாசுபாடால் சூரிய ஒளி குறையும் போது சூரிய வெப்பத்தை முதலிலேயே உறிஞ்சி அதிக அளவு சேமித்துக் கொள்ளும் தன்மை, படிந்துள்ள சுவடு கூறுகளை வெளியேற்றி நிறமிகள் உள்ள சிறகுகள் அல்லது செதில்களுக்கு கொண்டு செல்வது போன்றவை ஆகும்.

வரலாறு[தொகு]

இந்த தொழிற்சாலை கருநிறமியியலை 1900 இல் மரபியல் ஆராய்ச்சியாளர் வில்லியம் பேட்சன் என்பவர் முதன்முதலில் கவனித்தார். இவர் பூச்சிகள் வண்ண உருவத்தை மூதாதையரிடம் இருந்து பெற்றுக் கொள்வதை உற்று நோக்கினார் ஆனால் பல்லுருவ தோற்றத்திற்கு அவர் விளக்கம் அளிக்கவில்லை. 1906 இல் லியோனார்ட் டான்காஸ்டர் எனும் மரபியல் ஆராய்ச்சியாளர் 1800 இலிருந்து 1850 வரை அந்துப் பூச்சிகளை உற்று நோக்கி அவற்றின் நிறமிகள் மாறும் தன்மை அதிகம் இருந்ததாக கண்டு பிடித்துள்ளார். இந்த ஆராய்ச்சி நடந்த பகுதி இங்கிலாந்தின் அதிக தொழிற்சாலைகள் கொண்ட வட - மேற்கு பகுதியாகும். 1924இல் பரிணாம உயிரியிலாளர் ஜே.பி.எஸ். ஹால்டேன் என்பவர் ஒரு கணித கணக்கீடைக் கூறினார் அதன் படி மிளகு அந்துப் பூச்சியில் (பிஸ்டன் பெட்யூலேரியா) அடிக்கடி நிகழும் இந்த நிறமி மாற்றமானது உயிரிகள் இயற்கையாகவே தங்கள் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப மாறிக் கொள்ளும் தன்மையுடையது என்பதை நிரூபிக்கிறது என்று கூறினார். 1955 இலிருந்து மரபியல் ஆராய்ச்சியாளர் பெர்னார்ட் கெட்டில்வெல் என்பவர் அதிகமாக இந்த நிறமி மாற்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இவர் உயிரினங்களை பிடித்து அதில் குறியிட்டு பின் மறுபடியும் குறியிடும் ஆராய்ச்சி நுட்பத்தின் மூலம்(capture - mark and recapture) வெளிர் நிறமிகள் கொண்ட பூச்சிகளைக் காட்டிலும் அடர் நிறமிகள் கொண்டவை எந்த சூழலிலும் வாழும் தன்மை கொண்டதாக இருப்பதாகக் கூறினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Cook, L. M.; Turner, J. R. G. (2008). "Decline of melanism in two British moths: spatial, temporal and inter-specific variation". Heredity 101: 483–489. doi:10.1038/hdy.2008.105. http://www.nature.com/hdy/journal/v101/n6/full/hdy2008105a.html. 
  2. Michael Majerus (2008). "Industrial Melanism in the Peppered Moth, Biston betularia: An Excellent Teaching Example of Darwinian Evolution in Action". Evolution: Education and Outreach 2 (1): 63–74. doi:10.1007/s12052-008-0107-y. 
  3. Rudge, David W. (2005). "The Beauty of Kettlewell's Classic Experimental Demonstration of Natural Selection". BioScience 55 (4): 369–375. doi:10.1641/0006-3568(2005)055[0369:TBOKCE]2.0.CO;2. https://archive.org/details/sim_bioscience_2005-04_55_4/page/369. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழிற்சாலை_கருநிறமி&oldid=3699952" இலிருந்து மீள்விக்கப்பட்டது