உள்ளடக்கத்துக்குச் செல்

தொழிற்கல்விப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தச்சு வணிகப் பள்ளியில் மாணவர்கள் மரவேலை திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள், அண். 1920

தொழிற்கல்விப் பள்ளி (vocational school) வர்த்தகப் பள்ளி அல்லது தொழில்நுட்பப் பள்ளி என்பது ஒரு வகைக் கல்வி நிறுவனமாகும். இது நாட்டைப் பொறுத்து, தொழிற்கல்வி அல்லது ஒரு குறிப்பிட்ட திறன் அல்லது குறிப்பிட்ட பணிகளை முடிக்கத் தேவையான தொழில்நுட்பத் திறன்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இடைநிலைக் கல்வி அல்லது மேல்நிலைக் கல்வியாக வழங்கப்படுகிறது.[1] இவை வழக்கமான கல்வி நிலையங்களிலிருந்து சற்று வேறுபடுகின்றன. இவ்வகையான பள்ளிகள் பாடத்திட்டங்களை மனனம் செய்வதனை விட அதனைப் பயிற்சி செய்வதற்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறது.[2]

சொற்களஞ்சியம்

[தொகு]
ரஷ்யாவில் இடைநிலை தொழிற்கல்விப் பட்டயம்

இந்த வகைக் கல்வி நிறுவனம் ஒரு வர்த்தகப் பள்ளி, தொழில் மையம், தொழிற் கல்லூரி அல்லது தொழிற்கல்விக் கல்லூரி என்றும் அழைக்கப்படலாம்.[3]

பிராந்தியம் வாரியாக

[தொகு]

தெற்காசியா

[தொகு]

இந்தியா

[தொகு]

இந்தியாவில் தொழிற்கல்விப் பள்ளிகளானது, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன. உடான், தொழில்நுட்பப் பயிலகம், பர்வாஸ், தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம், தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள், தேசிய கிராம வாழ்வாதாரத்திற்கான ஆஜீவிகா இயக்கம், கைவினைஞர்கள் பயிற்சி திட்டம் ஆகியவை இந்திய அரசால் வழங்கப்படும் படிப்புகள் ஆகும். திறன் இந்தியா இயக்கம் இந்த அனைத்து நிறுவனங்களின் தரங்களையும் மேம்படுத்தியுள்ளது. இவை தவிர நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மேல்நிலைக் கல்வியில் பல தொழிற்கல்விப பாடங்களைச் சேர்த்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vocational Education in the US". nces.ed.gov. Archived from the original on 2018-06-29. பார்க்கப்பட்ட நாள் 2018-06-29.
  2. "Skilled Trades in Demand (Infographic)" இம் மூலத்தில் இருந்து 2018-06-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180629074256/https://www.adeccousa.com/employers/resources/skilled-trades-in-demand/. 
  3. "What are Vocational Schools?". Study.com. Archived from the original on 2018-06-29. பார்க்கப்பட்ட நாள் 2018-06-29.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழிற்கல்விப்_பள்ளி&oldid=3918608" இலிருந்து மீள்விக்கப்பட்டது