தொலைக்காட்சி அலைவாங்கி
Appearance
தொலைக்காட்சி அலைவாங்கி (TV aerial அல்லது TV Antenna) காற்றில் பரப்பப்படும் புவிப்புறத் தொலைக்காட்சி குறிப்பலைகளை பெறுவதற்கான சிறப்பு அலைவாங்கிகளாகும். இவை அதி உயர் அதிர்வெண் பட்டையில் 41 முதல் 250 மெகாஹெர்ட்சு வரையும் மீ உயர் அதிர்வெண் பட்டையில் 470 to 960 மெகாஹெர்ட்சு வரையுமுள்ள அதிர்வெண்களில் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகளை உள்வாங்கக் கூடியவை. இவை இரண்டு வகையாக தயாரிக்கப்படுகின்றன:
- "உட்புற" அலைவாங்கிகள் - தொலைக்காட்சிப் பெட்டியின் மேலோ அல்லது அடுத்தோ வைக்கப்படுகின்றன.
- "வெளிப்புற" அலைவாங்கிகள் - வீட்டின் கூரை மீதோ தனிக் கம்பத்தின் மீதோ வைக்கப்படுகின்றன.
மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் அலைவாங்கிகள்: இருமுனைவ அலைவாங்கியும்[1] ("முயல் காதுகள்") சுருள் அலைவாங்கிகளுமாகும். பெரிய அலைவாங்கிகளில் யாகி அலைவாங்கியும்[1] மடக்கை அமைப்பிட அலைவாங்கியுமாகும்.[1]
சான்றுகோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Gulati, R.R. (2007). Monochrome And Colour Television. New Age International. pp. 164–170. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8122416071.
வெளி இணைப்புகள்
[தொகு]- Article on the basic theory of TV aerials and their use
- Consumer Electronics Association antenna mapping page பரணிடப்பட்டது 2013-09-23 at the வந்தவழி இயந்திரம்
- [1]
- NEC Lab - A tool to design and test television antennas.