தொலைகதிர் மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொலைகதிர் மருத்துவம் (Teletherapy) என்பது கதிர்மருத்துவத்தின் ஒரு பகுதியாகும். இங்கு கதிர்வீச்சி மூலம் நோயாளியின் புறப்பரப்பிலிருந்து பொதுவாக 80 முதல் 100 செ.மீ தொலைவில் இருக்கும். கோபால்ட்-60, நேர்கோட்டு வேகவளர்த்திகள்( Clinac) பெரிதும் பயன்படுகின்றன. இன்று சிறப்பான பல கருவிகள் உள்ளன. மாறாக அண்மைக் கதிர் மருத்துவத்தில் (Brachytherapy) கதிர்வீச்சி மூலம் புற்று நோய்கண்ட திசுவினை அடுத்து அல்லது திசுவில் ஊன்றி இருக்குமாறு அமைத்து மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு கதிர் மூலமாக கோபால்ட்-60, சீசியம் -137, இரிடியம்-192, போன்ற கதிர் தனிமங்கள் பெரிதும் பயன்படுகின்றன.