தொலைகதிர் மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொலைகதிர் மருத்துவம் (Teletherapy) என்பது கதிர்மருத்துவத்தின் ஒரு பகுதியாகும். இங்கு கதிர்வீச்சி மூலம் நோயாளியின் புறப்பரப்பிலிருந்து பொதுவாக 80 முதல் 100 செ.மீ தொலைவில் இருக்கும். கோபால்ட்-60, நேர்கோட்டு வேகவளர்த்திகள்( Clinac) பெரிதும் பயன்படுகின்றன. இன்று சிறப்பான பல கருவிகள் உள்ளன. மாறாக அண்மைக் கதிர் மருத்துவத்தில் (Brachytherapy) கதிர்வீச்சி மூலம் புற்று நோய்கண்ட திசுவினை அடுத்து அல்லது திசுவில் ஊன்றி இருக்குமாறு அமைத்து மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு கதிர் மூலமாக கோபால்ட்-60, சீசியம் -137, இரிடியம்-192, போன்ற கதிர் தனிமங்கள் பெரிதும் பயன்படுகின்றன.

தொலை கதிர் மருத்துவத்தில் மருத்துவத்திற்கான புற்றுநோய் கண்ட திசுத் திரள் உடலின் பரப்பிலிருந்து சில செ.மீ. ஆழத்தில் ( )இருக்கக்கூடும்.தொலைமருத்துவத்திற்கான கருவியிலிருந்து பரப்பில் விழும் கதிர் வீச்சசளவு மருத்துவத்திற்கான திட்டத் தொலைவில் முன்பே அளவிடபட்டு இருக்க வேண்டும்.முன்பு இவ்வளவு இராண்ஜனில் அளவிடப்பட்டது.கதிர்வீச்சளவிலிருந்து கதிர் ஏட்பளவிற்கு மாற்றவேண்டும்.இதற்கான காரணி ( ) என்று குறிக்கப்பட்டுள்ளது.ஆழத்தில் ( ) % க்காட்டில்கதிர் ஏற்பளவு குற்பிட்ட புலப்பரப்பிற்கு என்ன என்று காணவேண்டும் இதற்கான அட்டவணைகள் உள்ளன..இந்த அளவினை ஒவ்வொரு நாளும் எத்தனை நிமிடங்கள் கதிர் வீசப்படுகிறது என்று தெரிந்து கொள்ளவேணேடும்.இந்தப்பெருக்குத் தொகையினை புற்றுத்திசு எவ்வளவு அளத்தில் இருக்கிறது என்பதனையும் தெரிந்து அதன் இருமடியால் வகுத்தால் தினம் புற்றுபெறும் ஏற்பளவு தெரியும்.இது அடியில் கொடுக்கப்பட்டுள்ள து


ஏற்பளவு = E..R .%DD.t /d^2

இதில்

E என்பது ஒரு நிமிடத்தில் பரப்பபில் கதிர் வீச்சசளவு( Exposure rate)

R இராண்ஜனிலிருந்து ரேட் அளவிற்கு மாற்றும் காரணி ( Roentgen to rad factor)

%DD விழுக்காட்டில் குறிப்பிட்ட ஆழத்தில் ஏற்பளவு percentage depth dose)

t தினம் கதிர் வீச்சின் கால அளவு Daily treatment time(

d பரப்பிலிருந்து பற்றுத்திசுவின் ஆழம்.(depth)

மொத்த கதிர் ஏற்பளவினைக் காண எத்தனை நாட்கள் கதிர் மருத்துவம் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிந்து அதனால் பெருக்கி தெரிந்து கொள்ளலாம்

புதிய அலகு முறையிலும் கணிக்கலாம்


பாபா அணு ஆராய்ச்சி மையம் குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொலைகதிர்_மருத்துவம்&oldid=3437467" இலிருந்து மீள்விக்கப்பட்டது