தொட்டபசவப்பா கோயில்

ஆள்கூறுகள்: 15°19′41″N 75°48′37″E / 15.32806°N 75.81028°E / 15.32806; 75.81028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தம்பாலில் உள்ள தொட்ட பசவப்பா கோயில், கி.பி. 12 ஆம் நூற்றாண்டு

தொட்டபசவப்பா கோயில் (Doddabasappa Temple) என்பது 12 ஆம் நூற்றாண்டின் மேலைச் சாளுக்கியர் காலத்திய கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட ஒரு கோயிலாகும். இது இந்தியாவின் கர்நாடக மாநிலம் தம்பாலில் உள்ளது. தம்பால் கடக் நகருக்கு தென்கிழக்கே 20 கிமீ (12 மைல்) தொலைவிலும், கொப்பள் மாவட்டத்தில் உள்ள இட்டாகிக்கு தென்மேற்கே 24 கிமீ (15 மைல்) தொலைவிலும் உள்ளது.[1] இங்கு கருவறையில் ஒரு சிவலிங்கம் உள்ளது. கோயில் உட்புறம் ஒரு நிலையான கட்டுமானம் மற்றும் ஒரு கருவறையும், ஒரு முன்மண்டபமும் , ஒரு முக்கிய மண்டபமும் உள்ளது. முன்மண்டபம் கருவறையை மண்டபத்துடன் இணைக்கிறது. [2] மேலைச் சாளுக்கிய நினைவுச்சின்னங்கள், தற்போதுள்ள திராவிடக் கட்டிடக்கலை (தென்னிந்திய) கோயில்களின் பிராந்திய மாறுபாடுகள், கர்நாடக திராவிட கட்டிடக்கலை பாரம்பரியத்தை வரையறுக்கின்றன.[3] [4]

விண்மீன் திட்டம்[தொகு]

தம்பாலில் உள்ள கிபி 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, தொட்டா பசவப்பா கோயில் விமானத்தின் இருபத்தி நான்கு புள்ளிகள் கொண்ட விண்மீன் திட்டம்

24-புள்ளிகள் கொண்ட தடையற்ற நட்சத்திர வடிவமைப்பு இந்த கோயிலின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.[5] மேலும், சோப்புக்கற்களைக் கொண்டு இதன் கட்டுமானம் எழுப்பப்பட்டுள்ளது.[5]

சான்றுகள்[தொகு]

  1. Cousens (1926), p. 114
  2. M.S. Dwarakinath. "THE CHALUKYAN MAGNIFICENCE". Spectrum. Deccan Herald. Archived from the original on 2011-08-11. பார்க்கப்பட்ட நாள் 2008-05-14.
  3. Hardy (1995), pp. 6–7
  4. Sinha, Ajay J. (1999). "Reviewed work: Indian Temple Architecture: Form and Transformation, the Karṇāṭa Drāviḍa Tradition, 7th to 13th Centuries, Adam Hardy". Artibus Asiae 58 (3/4): 358–362. doi:10.2307/3250027. 
  5. 5.0 5.1 Foekema (2003), p. 60

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Doddabasappa Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தொட்டபசவப்பா_கோயில்&oldid=3794337" இலிருந்து மீள்விக்கப்பட்டது