தொக்கந்தின்சு ஆறு
டோகாண்டின்ஸ் ஆறு (Tocantins River) என்பது பிரேசிலில் உள்ள ஒரு ஆறு ஆகும். இது நாட்டின் மையத்தின் பாயும் உயிர்நாடிபோன்ற ஆறு ஆகும். டுபி மொழியில், இதன் பெயரின் பொருளானது "தூக்கானின் அலகு" ("டோக்கன்" க்கு தூக்கான் என்ற பொருளும் டி என்பது "அலகு" என்பதைக் குறிக்கிறது). இந்த ஆறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சுமார் 2,450 கி.மீ. வரை பாய்கிறது இது உண்மையில் அமேசான் ஆற்றின் ஒரு கிளை ஆறு அல்ல, ஏனெனில் இதன் நீர் அத்திலாந்திக் பெருங்கடலில் அமேசானுடன் சேர்ந்து பாய்கிறது. இது நான்கு பிரேசிலிய மாநிலங்கள் ( கோயிஸ், டோகாண்டின்ஸ், மாரஞ்ஞோ மற்றும் பாரே ) வழியாகப் பாய்கிறது மேலும் பிரேசிலின் புதியதாக உருவாக்கப்பட்ட ஒரு மாநிலத்துக்கு இதன் பெயர் இடப்பட்டது. இந்த மாநிலமானது 1988 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்புவரை இது கோயிஸ் மாநிலத்தின் வடக்குப் பகுதியாக இருந்தது.
டோகாண்டின்ஸ் ஆறானது தென் அமெரிக்காவின் மிகப்பெரிய தெளிந்த நீர் பாயும் ஆறுகளில் ஒன்றாகும். [1]
ஆற்றின் போக்கு
[தொகு]இந்த ஆறானது பெடரல் மாவட்டத்தின் மேற்கே பைரீனியஸ் என்று அழைக்கப்படும் மலை மாவட்டத்தில் தோன்றுகிறது. ஆனால் அதன் மேற்கு துணை ஆறான அரகுவா ஆறு, செர்ரா டோஸ் கயாபஸின் சரிவுகளில் அதன் தீவிர தெற்கு நீர்பகுதிகளைக் கொண்டுள்ளது. டோகாண்டிஸ் ஆற்றுடன் சங்கமிப்பதற்கு முன்னர் அரகுவியா 1,670 கி.மீ. பாய்கிறது, இதன் அளவு கிட்டத்தட்ட சமமாக இருக்கும். இதன் முக்கிய துணை ஆறான ரியோ தாஸ் மோர்டெஸ் தவிர, அரகுவேயா ஆற்றில் இருபது சிறிய கிளைகள் உள்ளன, இந்த நீர்பரப்பின் வழியாக பல மைல் தொலைவுக்கு தூர கேனோ என்னும் ஒரு வகையான நாட்டுப் படகுகள் செலுத்தப்படுகின்றன.
டோகண்டிஸ் ஆறுக்குமரான்ஹோ மற்றும் பரணாடிங்கா என்று அழைக்கப்படும் இரண்டு துணை ஆறுகள், அவற்றைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் இருந்து, குறிப்பாக தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் ஏராளமான தண்ணீரை கொண்டுவந்து சேர்கின்றன.
விலங்குகள்
[தொகு]டொகாண்டின்ஸ் ஆற்றுப் படுகையில் (இதில் அரகுவியா ஆறும் அடங்கும்) அமேசானிய மனாட்டீ, அரகுவேய ஆற்று ஒங்கில் மற்றும் டுகுக்சி போன்ற பல பெரிய நீர்வாழ் பாலூட்டிகளின் இருப்பிடமாக உள்ளது. மேலும் கறுப்பு கெய்மன், கண்கவர் கெய்மன் மற்றும் மஞ்சள் புள்ளி ஆற்று ஆமை போன்ற பெரிய ஊர்வன விலங்குகளும் உள்ளன. [2]
டொகாண்டின்ஸ் ஆற்றுப் படுகையில் மீன் இனங்களானது அதிக இனவளம் கொண்டவையாக உள்ளன, இருப்பினும் இது அமேசான் படுகை தரத்தைவிட குறைவாகவே உள்ளது. [2] இதில் 175 க்கும் மேற்பட்ட அகணிய உயிரிகள் உட்பட 350 க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. [3] சரசிடே (டெட்ராஸ் மற்றும் அதைச்சார்ந்தவை), லோரிகாரிடே (பிளெகோ கேட்ஃபிஷ் மற்றும் அதைச்சார்ந்தவை) மற்றும் ரிவுலிடே (தென் அமெரிக்க கில்லிஃபிஷ்) ஆகியவை மிகுதியான இனங்கள் கொண்ட விலங்கு குடும்பங்கள் ஆகும். பெரும்பாலான விலங்கினங்கள் அமேசானில் தோன்றியவை என்றாலும், சில பரனா ஆறு மற்றும் சாவோ பிரான்சிஸ்கோ ஆறுகளுடனான தொடர்பைக் காட்டுகின்றன. டோகாண்டிஸ் ஆறும் இந்த இரண்டு ஆறுகளும் வெவ்வேறு திசைகளில் பாய்கின்றன, ஆனால் இவை அனைத்திற்கும் ஆதாரமாக பிரேசிலிய பீடபூமியின் ஒரு பிராந்தியத்தில் உள்ளது அங்கு குறைந்த நீர்நிலை அவற்றுக்கிடையே சில பரிமாற்றங்களை அனுமதிக்கிறது. [4] இதில் பல மீன் இனங்கள் உருவாகின்றன, ஆனால் இந்த மீன்கள் வலசை போதல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளால் தடைசெய்யப்படுகிறது. ஆற்றின் குறுக்கே பிரமாண்டமாக கட்டப்பட்ட டுகுருஸ் அணையால், ஆற்றின் ஒட்டம் மாறியது. இனால் சில சில விலங்கினங்கள் மோசமாக பாதிக்கப்பட்டன. மேலும் ஆற்றின் சில பகுதிகளில் இனப் பன்மையில் கணிசமான குறைவு ஏற்பட்டது. [5]
குறிப்புகள்
[தொகு]- ↑ Perez, M.S.. "Where the Xingu Bends and Will Soon Break". American Scientist. https://www.americanscientist.org/article/where-the-xingu-bends-and-will-soon-break.
- ↑ 2.0 2.1 Provete, D.B. (2013). Tocantins River. 1237-1239
- ↑ Hales, J., and P. Petry: Tocantins - Araguaia. Freshwater Ecoregions of the World. Retrieved 26 May 2014
- ↑ Garavello, J.C.; Garavello, J.P.; and Oliveira, A.K. (2010). Ichthyofauna, fish supply and fishermen activities on the mid-Tocantins River, Maranhão State, Brazil. Braz. J. Biol., vol. 70(3): 575-585
- ↑ Lambert de Brito Ribeiro, M.C.; Petrere Junior, M.; and Juras, A.A. (2006). Ecological integrity and fisheries ecology of the Araguaia—Tocantins River Basin, Brazil. Regulated Rivers: Research & Management, vol. 11(3-4): 325–350
வெளி இணைப்புகள்
[தொகு]- ஆற்றுப் படுகை வரைபடம் (போர்த்துகீசிய மொழியில்)
- Rio Tocantins