தொகைநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொகைநிலை என்பது புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் ஒன்று.

புறநானூற்றில் ‘தொகைநிலை’ என்று துறையிடப்பட்டுள்ள பாடல்கள் இரண்டு உள்ளன. இது தும்பைத் திணையின் துறை.

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேல்பஃறட்கைப் பெருவிற்கிள்ளி ஆகியோர் போர்புறம் என்னுமிடத்தில் படை வீரர்களை ஒதுக்கிவிட்டு இருவர் மட்டுமே ‘அறத்தின் மண்டி’ப் போரிட்டபோது இருவரும் ஒருங்கு மாண்ட செய்தியைக் கூறும் பாடல்கள் இவை.[1][2]

இலக்கணம்[தொகு]

  • தொல்காப்பியம் இதனை, “இரு பெரு வேந்தர் தாமும் சுற்றமும், ஒருவரும் ஒழியாத் தொகைநிலை”” என்று குறிப்பிடுகிறது. தொல்காப்பியம் புறத்திணையியல், 14
  • புறப்பொருள் வெண்பாமாலை தும்பைப் படலத் துறைகள் 24-ல் ஒன்றாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. புகழை நிலைநாட்டிப் போர்க்களத்திலேயை உயிர் துறத்தல் இத் துறை என்று அது குறிப்பிடுகிறது.[3]

அடிக்குறிப்பு[தொகு]

  1. கழாத்தலையார் புறநானூறு 62,
  2. பரணர் புறநானூறு 63
  3. அழிவின்று புகழ் நிறீஇ
    ஒழிவின்று களத்து ஒழிந்தன்று. – புறப்பொருள் வெண்பாமாலை 154

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொகைநிலை&oldid=1856705" இலிருந்து மீள்விக்கப்பட்டது