தைட்டானியத் தங்கம்
தைட்டானியத் தங்கம் (Titanium gold) என்பது (Ti-Au அல்லது Au-Ti) உலோகவியலில் தைட்டானியத்தையும் தங்கத்தையும் சேர்த்து உருவாக்கப்படும் ஒரு கலப்புலோகம் ஆகும். பல் மருத்துவம் [1][2], பீங்கான், அணிகலன் [3] போன்ற தொழில்களில் இக்கலப்புலோகம் பயன்படுத்தப்படுகிறது. மற்ற கலப்புலோகங்களைப் போலவே தைட்டானியத் தங்கமும் அதிக வலிமை, இழுவலிமை, கடினத்தன்மை, காந்தவியல் பண்பு முதலான பண்புகளை இதன் பகுதிப் பொருட்களை விடவும் அதிகமாகப் பெற்றுள்ளது [4]. 2016 சூலையில் மேற்கொள்ளப்பட்ட ஒர் ஆய்வில் இவ்வுலோகமிடைச் சேர்மம் தைட்டானியத் தங்கம் β-Ti3Au ஆனது பல்வேறு வகை எஃகுகளைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிக கடினத்தன்மையைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது [5].
மக்கள் பயன்பாடு
[தொகு]2008 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அயர்ன் மேன் திரைப்படத்தில் படத்தின் கதாநாயகன் உடுத்தியிருந்த கவசம் தைட்டானியத் தங்கம் கலப்புலோகத்தால் உருவாக்கப்பட்ட கவசமாகும் [6][7]. தங்கத் தைட்டானியம் கையுறை போல இருந்ததாக அயர்ன் மேனாக நடித்திருந்த நடிகர் இராபர்டு டௌனி சூனியர் தெரிவித்திருந்தார் [8].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fischer J (December 2000). "Mechanical, thermal, and chemical analyses of the binary system Au-Ti in the development of a dental alloy". J. Biomed. Mater. Res. 52 (4): 678–86. doi:10.1002/1097-4636(20001215)52:4<678::AID-JBM12>3.0.CO;2-P. பப்மெட்:11033550.
- ↑ Franke, P.; Neuschütz, D. (2007). Franke, P.; Neuschütz, D.. eds. Au-Ti (Gold–Titanium). 19B5. SpringerMaterials. பக். 1–5. doi:10.1007/978-3-540-45280-5_32. http://www.springerlink.com/content/x72j021025876151/.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Gafner, Geoffrey (1989). "The development of 990 gold–titanium: its production, use and properties". Gold Bull. 22 (4): 112–122. doi:10.1007/BF03214709.
- ↑ Svanidze, Eteri; Besara, Tiglet; Ozaydin, M. Fevsi; Tiwary, Chandra Sekhar; Wang, Jiakui K.; Radhakrishnan, Sruthi; Mani, Sendurai; Xin, Yan et al. (2016-07-01). "High hardness in the biocompatible intermetallic compound β-Ti3Au" (in en). Science Advances 2 (7): e1600319. doi:10.1126/sciadv.1600319. பன்னாட்டுத் தர தொடர் எண்:2375-2548. http://advances.sciencemag.org/content/2/7/e1600319.
- ↑ "Titanium + gold = new gold standard for artificial joints". news.rice.edu. Archived from the original on 2016-09-21. பார்க்கப்பட்ட நாள் 2016-09-17.
- ↑ http://www.latimes.com/entertainment/la-et-iron1-2008may01,0,5392362.story
- ↑ http://www.bit-tech.net/gaming/pc/2008/05/09/iron-man/1
- ↑ http://www.theinsider.com/news/842818_Robert_Downey_Jr._Says_Iron_Man_Suit_Fits_Him_Like_Gold_Titanium_Gold[தொடர்பிழந்த இணைப்பு]