தேவி உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மஹாதேவி

தேவி உபநிஷதம் (சமஸ்கிருதம் : देवी उपनिषत्, ஆங்கிலம்:Devi Upanishad), இந்து மதத்தின் உபநிஷதங்களில் சிறிய ஒன்றாகும்.[1] இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட உரைகளைக் கொண்டுள்ளது. அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ள 19 உபநிஷங்களில் தேவி உபநிஷதமும் ஒன்றாகும். இது எட்டு சக்தி உபநிடதங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது வேதாந்த இலக்கியத் தொகுப்பின் ஒரு பகுதியாகும். தேவி உபநிஷதம் இந்து மதத்தின் தத்துவக் கருத்துக்களை முன்வைக்கிறது.

தேவி உபநிஷத உரை பொ.ச. 9 முதல் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இயற்றப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது மகாதேவியை அனைத்து தெய்வங்களாகவும் குறிக்கிறது. தேவி உபநிஷத் என்பது முக்கியமான ஐந்து அதர்வாஷிர உபநிஷதங்களின் ஒரு பகுதியாகும். தாந்திரீகம் மற்றும் ஷக்தா தத்துவ மரபுகளுக்கு மிக முக்கியமானதாகும்.

தெய்வம் பிரம்மம் (உலகம்) என்றும், அவளிடமிருந்து பிரகதி (விஷயம்) மற்றும் புருஷா (உணர்வு) எழுகிறது என்றும் உபநிஷத் கூறுகிறது. அவள் பேரின்பம் மற்றும் பேரின்பம் இல்லாதவள். வேதங்கள் மற்றும் அதிலிருந்து வேறுபட்டவள், பிறக்கும் மற்றும் பிறக்காதவள். ஒட்டுமொத்த பிரபஞ்சம் அவளே என கூறுகிறது.

சொற்பிறப்பியல்[தொகு]

தேவி, தேவா ஆகிய சமஸ்கிருத சொற்கள் பொ. வ. மு 2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ரிக்வேத இலக்கியங்களில் காணப்படுகின்றன.[2] தேவா என்பது ஆண்பால், பெண்பால் தேவி.[3] இவை "மேலுலக, தெய்வீக, உயர்ந்த சிறப்பான, உயர்ந்த, பிரகாசமானவை" என்று பொருள்படும்.[4][5] உபநிஷத் என்ற சொல்லின் அர்த்தம் இந்து மதத்தின் தத்துவக் கருத்துக்களை முன்வைக்கும் வேதாந்த இலக்கியத் தொகுப்பு என்பதாகும்.[6]

வரலாறு[தொகு]

11 ஆம் நூற்றாண்டில் நேபாளத்தில் தேவி உபநிஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவி சிற்பத்திலும் ஓவியங்களிலும் காணப்படுகிறது

டிரினிட்டி பல்கலைக்கழகத்தின் மத பேராசிரியரான சீவர் மெக்கன்சி பிரவுன் இந்த முக்கியமான தாந்த்ரீக மற்றும் சக்தி உரை (தேவி உபநிடதம்) பொ.ச. ஒன்பதாம் மற்றும் பதினான்காம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இயற்றப்பட்டிருக்கலாம் என்கிறார்.[7][8] மொத்தமுள்ள 108 உபநிஷதங்களில் 81 ஆவதாக பட்டியலிடப்பட்டுள்ளது.[9][10] தேவி உபநிஷதம் ஐந்து அதர்வஷிராஸ் உபநிஷதங்களின் ஒரு பகுதியாகும். அவை ஒவ்வொன்றும் கணபதி, நாராயணா, ருத்ரா, சூர்யா மற்றும் தேவி ஆகிய ஐந்து முக்கிய தெய்வங்கள் அல்லது சன்னதிகளின் (பஞ்சாயத்தானன்) பெயரிடப்பட்டுள்ளன. இவற்றின் தத்துவங்கள் திரிபுரா உபநிஷத், பஹ்ரிச்சா உபநிஷத், மற்றும் குஹயாகல உபநிஷத் ஆகியவற்றிலும் காணப்படுகிறது.

அடித்தளம் மற்றும் அமைப்பு[தொகு]

தேவிஉபநிஷதம் 32 வசனங்களைக் கொண்டுள்ளது.[11][12][13] இவை தேவியை மிக உயர்ந்த வடிவிலும் பிரபஞ்சத்தின் இறுதி உண்மை என்றும் உரைக்கிறது.[14][15] தேவியிடமிருந்து பிரகதி (விஷயம்) மற்றும் புருஷா (நனவு) எழுகிறது, அவள் பேரின்பம் மற்றும் பேரின்பம் இல்லாதவள், அவளிடமிருந்து வேதங்கள் தோன்றின. அவளே பஞ்சபூதங்கள், அவளே இந்த பிரபஞ்சம் அனைத்தும் நிரம்பியுள்ளாள்.[11][16] தேவி "அறியப்படாத, முடிவில்லாத, புரிந்துகொள்ள முடியாத, தெரியாத, ஒன்று மற்றும் பல" என்று உபநிஷதம் 26 முதல் 28 வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது. தேவியே அனைத்து மந்திரங்களுக்கும் நீரூற்று என்று உபநிஷதம் கூறுகிறது. எல்லா அறிவும் அவளுடைய உள்ளார்ந்த பண்பு, அவளுக்கு அப்பால் எதுவும் இல்லை என வரையறுக்கிறது. 29 முதல் 32 வசனங்களில், இந்த உபநிஷதத்தை ஓதுவதன் நன்மைகள் விளக்கப்பட்டுள்ளன. உபநிஷத்த்தை பத்து முறை பாராயணம் செய்வது எல்லா பாவங்களையும் நீக்குகிறது.[17] அதே நன்மைகளைப் பெற காலை மற்றும் மாலை நேரங்களில் பாராயணம் செய்வதையும் பரிந்துரைக்கிறது. நள்ளிரவில் பாராயணம் செய்வது ஒருவரின் பேச்சை முழுமையாக்குகிறது. ஒரு தெய்வத்தின் உருவத்தை பிரதிஷ்டை செய்யும் போது பாராயணம் செய்வது ஆற்றலைத் தருகிறது.[16]

மேற்கோள்கள்[தொகு]

 1. Ramamoorthy & Nome 2000, பக். 19.
 2. Klaus Klostermaier (1984), Mythologies and Philosophies of Salvation in the Theistic Traditions of India, Wilfrid Laurier University Press, ISBN 978-0889201583, pages 198-202
 3. Klostermaier 2010, பக். 496.
 4. Klostermaier 2010, பக். 492, 101-102.
 5. John Stratton Hawley and Donna Marie Wulff (1998), Devi: Goddesses of India, Motilal Banarsidass, ISBN 978-8120814912, pages 18-21
 6. Max Muller, The Upanishads, Part 1, Oxford University Press, page LXXXVI footnote 1, 22, verse 13.4
 7. C Mackenzie Brown பரணிடப்பட்டது 2016-06-09 at the வந்தவழி இயந்திரம் Trinity University, Department of Religion, Texas (2015)
 8. Brown 1998, பக். 25-26.
 9. Deussen, Bedekar & Palsule (tr.) 1997, பக். 557.
 10. Knapp 2005, பக். 475.
 11. 11.0 11.1 McDaniel 2004, பக். 90–92.
 12. Brown 1998, பக். 26.
 13. Coburn 1991, பக். 136.
 14. James Lochtefeld (2002), Brahman, The Illustrated Encyclopedia of Hinduism, Vol. 1: A–M, Rosen Publishing, ISBN 978-0-8239-3179-8, page 122
 15. PT Raju (2006), Idealistic Thought of India, Routledge, ISBN 978-1-4067-3262-7, page 426 and Conclusion chapter part XII
 16. 16.0 16.1 Warrier 1967, பக். 77-84.
 17. Brown 1998.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவி_உபநிடதம்&oldid=3020876" இருந்து மீள்விக்கப்பட்டது