உள்ளடக்கத்துக்குச் செல்

தேரா சச்சா சௌதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேரா சச்சா சவுதா (Dera Sacha Sauda) என்பது சமூக நல அமைப்பு மற்றும் ஆன்மிக நிறுவனம் ஆகும். வடஇந்தியாவில் அரியானா மாநிலத்தில் உள்ள சிர்சா என்னும் ஊரில் மஸ்தான பலுஸ்த்தானி என்ற துறவியால் 1948 ஏப்பிரல் 29 இல் தொடங்கப்பட்டது. இந்தியாவிலும் ஐக்கிய அமெரிக்கா, கனடா,   ஐக்கிய அரபுக் குடியரசு, இங்கிலாந்து, ஆத்திரேலியா போன்ற நாடுகளில் இந்த அமைப்புக்கு ஆசிரமங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 6 கோடி அன்பர்கள் இருக்கிறார்கள்.[1][2]

அமைப்பின் வரலாறு

[தொகு]

தேரா சச்சா சவுதா என்ற அமைப்பைத் தொடங்கிய மஸ்தான பலுச்சிஸ்தானை, அருள்மிகு பேபரவா மஸ்தானா மகராஜ் என்று பக்தர்கள் அன்புடன் அழைத்து வந்தார்கள். இவர் 1960 ஏப்பிரல் 18 இல் காலமானார். அவரை அடுத்து சா சத்னம் சிங்  என்பவர் தலைமை ஏற்றார். அவருக்குப் பின் மூன்றாம் அதிபதியாக குர்மீட்  ராம் ரகிம் சிங் என்பவர் 1990 செப்டம்பர் 23 இல் தலைமைப் பதவியை ஏற்றார். [3][4][5]

குர்மீத் ராம் ரகீம் மீது பாலியல் வன்புணர்ச்சி குற்றத்திற்காக 2002 இல் செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் உசாவல் நடந்து, நடுவண் புலனாய்வுத் துறை நீதிமன்றம், இவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது. அதன் விளைவாக 2017 ஆகத்து 25 இல் குர்மீத் ராம் ரகீம் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அடுத்து பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இவருடைய தொண்டர்கள் வன்செயல்களில் இறங்கிப் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் உண்டாக்கினர்.[6]

அமைப்பின் கோட்பாடுகள்

[தொகு]

சமயச் சார்பின்மை, சமன்மை, பொருள்கள் செல்வங்கள் விரும்பாமை, உண்மை, நன்னம்பிக்கை, தனி ஒழுக்கம், கடின உழைப்பு,  தியானம் போன்றவை இந்த அமைப்பைத் தொடங்கிய  சா மஸ்தானாவினால் சொல்லப்பட்ட கோட்பாடுகள் ஆகும் . சண்டைச்  சச்சரவுகள் இல்லாத அமைதியான உலகு அமைதலும்,  தியானத்தின் மூலம் இறைவனை அடைதலும், சமூகத்தில் பெண்களுக்கு உரிய நிலை கிடைத்தலும் இந்த அமைப்பின் நோக்கங்கள் என வரையறுக்கப்பட்டன.

செயல்பாடுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேரா_சச்சா_சௌதா&oldid=3217412" இலிருந்து மீள்விக்கப்பட்டது