தேரா கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேரா கோட்டை (Tera Fort) என்பது இந்தியாவின் குசராத்தின் கச்சு மாவட்டத்தில் உள்ள பல கோட்டைகளில் ஒன்றாகும். இது அப்தாசா வட்டத்தில் உள்ள தேரா கிராமத்திற்கு அருகில் தென்மேற்கு கச்சுப் பகுதியில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

தேரா கோட்டை புஜ் நகருக்கு மேற்கே எண்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது சட்டசார், சுமேராசர் மற்றும் சதாசர் ஆகிய துரேதாரா (மூன்று ஏரிகள்) கரையில் கச்சு சமவெளியில் அமைந்துள்ளது.[1][2]

வரலாறு[தொகு]

தேரா கோட்டை ஜடேஜா தலைவர்களில் ஒருவரால் கட்டப்பட்டது. இது தேராவின் தேசால்ஜி I (1718-1741) ஆட்சியின் போது வழங்கப்பட்டது.[3]

மகாராவ் லக்பத்ஜி (ஆட்சி 1741-1760) ஆட்சியின் போது நடந்த போரில் தேரா கோட்டை மோசமாகச் சேதமடைந்தது. தேரா பகுதியின் தலைவரான தேராவின் சும்ராஜி தாகூர், ராவ் கச்சு பற்றி மோசமாகப் பேசினார். லக்பத்ஜி கிளர்ச்சியை அடக்க தேராவுக்கு ஒரு படையை அனுப்பினார். கச்சு வரலாற்றில் முதன்முறையாக, பீரங்கி இப்போரில் பயன்படுத்தப்பட்டது. இந்த பீரங்கியைப் பிரபல ராம் சிங் மலம் அமைத்தார். பீரங்கி சக்தி கோட்டையின் பெரும்பகுதியை அழித்தது. மூன்று மாத முற்றுகைக்குப் பிறகு, சும்ராஜி சரணடைந்து தனது கருத்துக்களுக்கு முறையான மன்னிப்புக் கேட்டபோது போர் முடிவுக்கு வந்தது.

கோட்டையின் சுவர்கள் 1819-ல் கச்சு ரான் நிலநடுக்கத்தில் சேதமடைந்தது. இவை பின்னர் சரிசெய்யப்பட்டன.[4]

இந்த கோட்டை இப்போது கச்சின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tera fort | Tera fort in Kutchh Gujarat India | Fort of Kutchh | Fort of Gujarat | Nri Gujarati Tourism Places Tera fort
  2. Forts & Fortresses | KutchForever.com
  3. "History of Kutch". KutchForever.com.
  4. Gazetteer of the Bombay Presidency: Cutch, Palanpur, and Mahi Kantha. Printed at the Government Central Press. 1880. பக். 252. https://books.google.com/books?id=dLUBAAAAYAAJ. 
  5. tera fort Photo from Incredible India பரணிடப்பட்டது 2011-08-11 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேரா_கோட்டை&oldid=3800407" இலிருந்து மீள்விக்கப்பட்டது