தேனீ நச்சு
Appearance
தேனீ நச்சு (Apitoxin) என்பது தேனீ ஒரு விலங்கைக் கொட்டும் போது கொடுக்கின் மூலம் செலுத்தப்படும் நச்சு. இது நிறமற்றது; கசப்புச் சுவையுடையது; அமிலத் தன்மை கொண்டது. வேதியியல் அடிப்படையில் இது பல்வேறு புரதங்கள் சேர்நத ஒரு கலவை.
இது அழற்சி தடுக்கும் பண்பும் குருதி உறைதல் தடுக்கும் பண்பும் கொண்டுள்ளதால் சில வாத நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.