தேஜஸ்வினி கவுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேஜஸ்வினி கவுடா (Tejashwini Gowda)(பிறப்பு 11 நவம்பர் 1966) என்பவர் கருநாடக மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 14வது மக்களவையில் (2004-2009) கர்நாடகாவின் (இந்தியா) கனகபுராவிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார். இந்த இடம் பெங்களூரு (கிராமப்புற) தொகுதியாக தற்பொழுது மாற்றப்பட்டது. மேலும் இவர் 2009-ல் மூன்றாவது இடத்தில் வந்தபோது புதிய தொகுதியில் போட்டியிட்டார். மார்ச் 2014-ல் இவர் காங்கிரசு கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[1]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

தேஜஸ்வினி 11 நவம்பர் 1966 அன்று பெங்களூர் கிராமப்புற மாவட்டத்தில் உள்ள தொட்டராயப்பனஅள்ளியில் முனிநஞ்சப்பா மற்றும் முனிதாயம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பெங்களூரில் உள்ள விவேகந்தா சட்டக் கல்லூரியில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும், சட்டத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "11 members elected uncontested to Karnataka Legislative Council From Assembly". பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
  2. SeeRamesh, Dr. (Smt). Tejashwini's Profile on Lok Sabha's Member Pages பரணிடப்பட்டது 22 சூன் 2006 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஜஸ்வினி_கவுடா&oldid=3520100" இலிருந்து மீள்விக்கப்பட்டது