உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய வரலாற்று இடங்கள் பதிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தே.வ.இ.ப சின்னம்.
றோட் தீவிலுள்ள வரலாற்று மாவட்டமான பாடுக்கெட்டில் உள்ள இசுலேட்டர் மில் வரலாற்றுக்களம் தேசியப் பதிகையில் இடம்பெற்ற முதல் இடமாகும். நவம்பர் 13, 1966இல் பட்டியலில் பதியப்பட்டது.[1]
மிச்சிகனின் வாசிங்டன் நகரில் உள்ள லோரென் ஆன்ட்ரூசு எண்கோண மாளிகை தேசியப் பதிகையில் செப்டம்பர் 3, 1971இல் பதிவு பெற்றது.
மாசச்சூசெட்சின் சேலத்தில் சாமுவல் மெக்ன்டைர் 1800இல் கட்டிய இசுடீபன் பிலிப்சு மாளிகை வரலாற்று அருங்காட்சியகமாக இயங்கி வருகின்றது; பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டுள்ளது.
மாசச்சூசெட்சின் சேலத்தில் உள்ள ஆமில்டன் கூடம் 1970இல் தேசிய வரலாற்று இடங்கள் பதிகையில் சேர்க்கப்பட்டது. இதனையும் மக்கென்டைர் 1805இல் கட்டினார்.

தேசிய வரலாற்று இடங்கள் பதிகை (National Register of Historic Places, NRHP) ஐக்கிய அமெரிக்கக் கூட்டரசின் பாதுகாக்கப்பட வேண்டிய மாவட்டங்கள், இடங்கள், கட்டிடங்கள், கட்டமைப்புக்கள், பொருட்களின் (சொத்துக்கள்) அலுவல்முறையான பட்டியல் ஆகும். இந்தப் பட்டியலை தேசியப் பூங்காக்கள் சேவை அமைப்பு பராமரித்து வருகின்றது. 1966ஆம் ஆண்டின் தேசிய வரலாற்று இடங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி இந்தப் பதிகை உருவாக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் சேர்க்கப்பட கடைபிடிக்கப்படும் செயல்முறையையும் இச்சட்டம் வரையறுத்துள்ளது.

இந்தப் பட்டியலில் பத்து இலட்சத்திற்கும் கூடுதலான சொத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 80,000 நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ளன. மற்றவை வரலாற்று மாவட்டங்களின் அங்கமாக சிறு பங்களிப்பு சொத்துக்களாக இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 30,000 சொத்துக்கள் தேசியப் பதிகையில் சேர்க்கப்படுகின்றன. இவற்றில் சில தேசிய வரலாற்று அடையாளங்களாகவும் உள்ளன.

இந்த தேசியப் பதிகையில் பட்டியலிடப்பட்டுள்ளவற்றின் பாதுகாப்பிற்கான செலவினங்கள் வரிச்சலுகைகளுக்கு தகுதி பெற்றவை.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "National Register Information System". National Register of Historic Places. National Park Service. 2010-07-09.

வெளி இணைப்புகள்

[தொகு]