தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனம்
சுருக்கம்NIMR
தலைமையகம்
  • பிரிவு 8, துவாரகா, தில்லி-110077
சேவை பகுதி
இந்தியா
இயக்குநர்
அமித் சர்மா
தாய் அமைப்பு
இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை
வரவு செலவு திட்டம்
800 கோடி (US$100 மில்லியன்)
வலைத்தளம்www.nimr.org.in

தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனம் (National Institute of Malaria Research) என்பது 1977ல் நிறுவப்பட்ட இந்திய அரசின் சுகாதார ஆராய்ச்சி, மற்றும் குடும்ப நல அமைச்சின் கீழ் புது தில்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாகும். இது நவம்பர் 2005இல் தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது.[1]

முதன்மைக் கட்டிடம்

இந்த நிறுவனத்தின் அடிப்படை, பயன்பாட்டு மற்றும் செயல்பாடு கள ஆராய்ச்சி மூலம் மலேரியா பிரச்சனைகளுக்குக் குறுகிய கால மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை கண்டறிவதே. பயிற்சி/பட்டறைகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் மனிதவள வள மேம்பாட்டில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல ஆண்டுகளாக இங்கு மேற்கொள்ளப்படும் ஆய்வுகளாக, கொசுக்களின் பரவல் குறித்த கணக்கெடுப்பு, மலேரியா மலேரியா கடத்திகள் மற்றும் ஒட்டுண்ணிகளுக்கான மரபணு மற்றும் மூலக்கூறு குறிப்பான்கள் குறித்த ஆய்வு, உயிரணு வகைப்பாட்டியல், அடையாளம் காணப்பட்ட சிற்றினங்களுக்கிடையேயான உயிரினங்களிடையே உயிரியல் வேறுபாடுகளை ஆராய்தல், மூலக்கூறு அடையாள நுட்பங்களின் வளர்ச்சி, இடம் மற்றும் நேரம் மூலம் பூச்சிக்கொல்லி எதிர்ப்பைக் கண்காணித்தல், செயல் திட்டங்களைத் தயாரித்தல் போன்றவையாகும். இதில் மதிப்புமிக்க தகவல்களை இந்நிறுவனம் ஆய்ந்துள்ளது. புதிய பூச்சிக்கொல்லிகள், இளம் உயிரிகளைத் தாக்கக்கூடிய நச்சுக்கொல்லிகள், பூச்சிக்கொல்லி கலந்த படுக்கை வலைகள், மருந்துகள் மற்றும் ஒட்டுண்ணி கண்டறியும் கருவிகள் ஆகியவற்றின் கள மதிப்பீடு மலேரியா கட்டுப்பாட்டில் புதிய மதிப்பீட்டினை வழங்கியுள்ளது. இவற்றில் பல தேசிய மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.[2]

தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனம் தில்லியில் நன்கு மேம்பட்ட ஆய்வகங்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளது. மலேரியாவின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ச்சி செய்ய, மலேரியா அதிகம் உள்ளப் பகுதிகளில் 10 கள ஆய்வகங்களைக் கொண்டுள்ளது.[3] இது புதிய தொழில்நுட்பங்களுக்கான சோதனை தளமாகவும், தொழில்நுட்பங்களைப் பரிமாறவும் உதவுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Guerin, Pj; Dhorda, M; Ganguly, Nk; Sibley, Ch (2019). "Malaria control in India: A national perspective in a regional and global fight to eliminate malaria" (in en). Journal of Vector Borne Diseases 56 (1): 41. doi:10.4103/0972-9062.257773. பன்னாட்டுத் தர தொடர் எண்:0972-9062. http://www.jvbd.org/text.asp?2019/56/1/41/257773. 
  2. "National Institute of Malaria Research (NIMR), New Delhi". www.indiascienceandtechnology.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-02.
  3. "Innovation to Impact National Institute of Malaria Research, Delhi". innovationtoimpact.org. பார்க்கப்பட்ட நாள் 2021-08-02.

வெளி இணைப்புகள்[தொகு]