தேசிய பல்லுயிர் வலையமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய பல்லுயிர் வலையமைப்பு (National Biodiversity Network) என்பது ஐக்கிய இராச்சியத்தில் 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு கூட்டு அமைப்பாகும்.[1] தேசிய பல்லுயிர் வலையமைப்பு தனது இணையதள தரவுத் தேடல் மூலம் பல்வேறு ஊடகங்களில் உள்ள பல்லுயிர்த் தகவல்களைக் கிடைக்கச் செய்ய உறுதிபூண்டுள்ளது.[2]

விளக்கம்[தொகு]

ஐக்கிய இராச்சியம் மற்றும் அயர்லாந்தில் 60,000 பேர் வரை பல்லுயிர் தகவல்களைப் பதிவு செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் பெரும்பகுதி தன்னார்வமானது. சுமார் 2,000 தேசிய சங்கங்கள் மற்றும் பதிவுத் திட்டங்கள் மூலம் இதனை ஈட்டமுடிந்தது. ஐக்கிய இராச்சிய அரசாங்கம் தன் நிறுவனங்கள் மூலம் பல்லுயிர் தரவுகளையும் சேகரிக்கிறது. இந்தத் தரவின் தொகுப்பு மற்றும் விளக்கத்திற்கான முக்கிய கூறுகளில் ஒன்று உள்ளூர் சுற்றுச்சூழல் பதிவு மையங்களின் வலையமைப்பு ஆகும்.[3]

2012-ல், அதிக நன்கொடைகளைத் திரட்டிய முதல் 1,000 ஐக்கிய இராச்சிய தொண்டு நிறுவனங்களில் இது பட்டியலிடப்பட்டது.[4]

தேசிய பல்லுயிர் வலையமைப்பு அறக்கட்டளை[தொகு]

தேசிய பல்லுயிர் வலையமைப்பு அறக்கட்டளை[1] தொடர்புடைய வலையமைப்புகளைக் கட்டமைக்க உதவும் அமைப்பாகும். பல்லுயிர்த் தரவுகளின் சேகரிப்பு, தொகுப்பு மற்றும் பரிமாற்றத்திற்கான ஒப்புக்கொள்ளப்பட்ட தரநிலைகளை இது ஆதரிக்கிறது. மேலும் மேம்பட்ட அணுகலை ஊக்குவிக்கிறது. தற்போதைய கூட்டாண்மை 200க்கும் மேற்பட்ட பொது மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

தேசிய பல்லுயிர் வலையமைப்பு வரைபடம் தற்போது 900க்கும் மேற்பட்ட வெவ்வேறு தரவுத்தொகுப்புகளிலிருந்து (செப்டம்பர் 2020) 230 மில்லியனுக்கும் அதிகமான சிற்றின பதிவுகளைக் கொண்டுள்ளது.[2] தேசிய பல்லுயிர் வலையமைப்பு வரைபடம் பற்றிய தரவை ஐக்கிய இராச்சியம், வடக்கு அயர்லாந்து மற்றும் மாண் தீவு வனவிலங்குகளில் ஆர்வமுள்ள எவரும் அணுகலாம். இத்தகவல்களைப் பல்வேறு நிலைகளில் தேடலாம். ஏனெனில் இது பல்வேறு ஊடாடும் கருவிகளைப் பயன்படுத்தி விநியோக வரைபடங்களைப் பார்க்கவும் தரவைப் பதிவிறக்கவும் அனுமதிக்கிறது. வரைபடங்கள் தேதி வரம்பில் தனிப்பயனாக்கப்படலாம் மற்றும் ஒரு சிற்றினத்தின் பரவலின் மாற்றங்களைக் காட்டலாம்.

வனவிலங்கு தரவுகளை எண்ணிம மயமாக்கப்பட்ட மற்றும் பரிமாற்றம் செய்யக்கூடிய வடிவத்தில் அணுகுவதற்கான கருவிகளை வழங்குவதன் மூலமும், மக்களுக்குத் தேவையான தகவல்களை எளிதாக அணுகச் செய்வதன் மூலமும், இயற்கைச் சூழல் இப்போதும் எதிர்கால சந்ததியினருக்காகவும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய விவேகமான மற்றும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க முடியும் என்று இந்நிறுவனம் நம்புகிறது.

ஏப்ரல் 2017-ல் தேசிய பல்லுயிர் வலையமைப்பு வரைபட முகப்பினை தேசிய பல்லுயிர் வலையமைப்பு மாற்றியது.

குழு[தொகு]

தேசிய பல்லுயிர் வலையமைப்பு அறக்கட்டளை தன் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை எளிதாக்குவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் ஒரு குழுவைப் நியமித்துள்ளது. மேலும் இது 'செயலகம்' என்று குறிப்பிடப்படுகிறது. தேசிய பல்லுயிர் வலையமைப்பு அறக்கட்டளை பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாக உள்ளது.[5]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • உயிரியல் பதிவு

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]