தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகம் (National Minorities Development and Finance Corporation) 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் ஓர் இலாப நோக்கற்ற நிறுவனமாக சேர்க்கப்பட்டது. சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த தகுதியான பயனாளிகளுக்கு சுயதொழில் நடவடிக்கைகளுக்கு சலுகை நிதி வழங்குவது இவ்வமைப்பின் நோக்கமாகும். வறுமைக் கோட்டின் இருமடங்குக்கு கீழான வருமானமாக குடும்ப வருமானம் இருத்தல் இதற்கான நிபந்தனையாகும்.[1][2]

சிறுபான்மை விவகார அமைச்சகம் நிறுவப்பட்ட பிறகு, தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகத்தின் நிர்வாகக் கட்டுப்பாடு இந்த அமைச்சகத்திற்குள் இணைக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Equity to NMDFC |". Minorityaffairs.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2013-07-25.
  2. "Press Information Bureau English Releases". Pib.nic.in. 2011-07-31. பார்க்கப்பட்ட நாள் 2013-07-25.
  3. "National Minorities Development & Finance Corporation". Nmdfc.org. பார்க்கப்பட்ட நாள் 2013-07-25.

புற இணைப்புகள்[தொகு]

www.nmdfc.org