தெல்லுருட்டான் விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தெல்லு (தெல்லுருட்டான்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தெல்லுருட்டான் விளையாட்டு அரங்கம்
தெல்லுக்காய்

தெல்லுருட்டான் விளையாட்டு தெல்லுக்காய்களை உருட்டி விளையாடும் விளையாட்டு. சிறுவர்கள் இதனை விளையாடுவர்.

ஆடும் முறை[தொகு]

அக்டோபர், நவம்பர் மாதங்களில் தெல்லுக்காய்கள் மிகுதியாகக் கிடைக்கும்.விளையாடும் சிறுவர்கள் அனைவரும் தெல்லுக்காய்களை வைத்துக்கொள்வர். முதலில் ஆடுபவர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தெல்லுக்காய்களை நிலத்தில் வைப்பார். மற்றவர்கள் அதே எண்ணிக்கையில் தெல்லுக்காய்களை அதனுடன் வைப்பர்.

பின் ஒவ்வொருவராக ஒரு உத்திக் கோட்டிலிருந்து தன் தெல்லுக்காய்களில் ஒன்றைச் சுவரில் மோதித் திரும்பும்படி உருட்டுவர். யாருடைய காய் சுவரிலிருந்து அதிக தொலைவில் கிடக்கிறதோ அவர் தன் கையிலுள்ள மற்றொரு காயால் அடிப்பார். இப்படி அடிப்பதற்கு உசுப்புதல் என்று பெயர். உசுப்பிவிட்டால் நிலத்தில் வைக்கப்பட்டுள்ள எல்லாக் காய்களையும் எடுத்துக்கொள்ளலாம். ஒருவர் உசுப்பாவிட்டால் அடுத்த நிலையால் உள்ளவர் உசுப்பி எடுத்துக்கொள்ளலாம்.

வலுவாகக் காயை எறிவதிலும், குறி பார்த்து அடிப்பதிலும் திறமை உள்ளவர் அதிக காய்களை ஈட்டி வெற்றி பெறுவார்.

மேலும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • கே. வி. ராமச்சந்திரன், (தமிழாக்கம்), மூலம் எஸ்.கே.கோவிந்த ராஜுலு & திருமதி டி.கே.ஜோசப், பொழுதுபோக்கு விளையாட்டுகள், அருணோதயம் வெளியீடு, சென்னை, 1959
  • கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல், 1982
  • ஞா. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980