தெல்கர் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெல்கர் அருவி
Telhar Falls
தெல்கர் அருவி
அமைவிடம்Kaimur, பீகார், இந்தியா
வகைபிரிக்கப்பட்டது
வீழ்ச்சி எண்ணிக்கை1

தெல்கர் அருவி (Telhar Falls) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள கைமூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அருவியின் பெயராகும். இந்த அருவி துர்காவதி நதியின் தோன்றுமிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. துர்காவதி நீர்த்தேக்க திட்டத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அருவி உள்ளது.[1]

தெல்கர் அருவியிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு மாதமும் குளிர்ச்சியாக இருக்கும் என்று அறியப்படுகிறது. கைமூர் மலைகளின் பரப்பளவு மற்றும் காடுகளுக்கு மத்தியில் அழகிய தெல்கர் குந்து அருவி, துட்லா பவானி அருவி, காசிசு அருவி, மஞ்சர் குந்து அருவி ஆகியவை மழை நாட்களில் மிகவும் பசுமையாக அமைந்திருக்கும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Waterfalls in Bihar". 19 March 2014.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "Telhar Kund Bihar » Prepare For Exams" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-11-20. பார்க்கப்பட்ட நாள் 2022-12-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெல்கர்_அருவி&oldid=3931254" இலிருந்து மீள்விக்கப்பட்டது