தெற்கு ஆளுநரகம்
Jump to navigation
Jump to search
தெற்கு கவர்னரேட் المحافظة الجنوبية | ||
---|---|---|
ஆளுநரகம் | ||
| ||
![]() பகுரைனில் தெற்கு கவர்னரேட்டின் அமைவிடம் | ||
நாடு | ![]() | |
அரசு | ||
• ஆளுநர் | அலி அல்-கலீஃபா இடையே கலீஃப் | |
மக்கள்தொகை (2010[1]) | ||
• மொத்தம் | 101,456 | |
நேர வலயம் | Arabia Standard Time (ஒசநே+3) | |
இணையதளம் | www.southern.gov.bh |
தெற்கு கவர்னரேட் (Southern Governorate, அரபு மொழி: المحافظة الجنوبية ) என்பது பகுரைனின் நான்கு ஆளுநரகங்களில் பரப்பளவில் மிகப் பெரியதும், மக்கள் தொகையில் (91,450) மிகச்சிறிய மாகாணமும் ஆகும்.[2] இதில் பகுரைனின் பழைய நகராட்சிகளின் பகுதிகளான - அல் மிந்தாக்கா அல் கர்பியா, அர் ரிஃபா வா அல் மிந்தாக்கா அல் ஜானுபியா, ஜுசூர் ஹவார் (ஹவார் தீவுகள்) ஆகியவை அடங்கும். இது பஹ்ரைனின் பிராந்தியங்களில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்டது.
தெற்கு ஆளுநரகத்தின் ஆளுநரான ஷேக் கலீஃபா பின் அலி அல்-கலீஃபா (பி. 1993) ஆவார். இவர் பிரதமர் இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபாவின் பேரனும், துணை பிரதம மந்திரி ஷேக் அலி பின் கலீஃபா அல் கலீஃபாவின் மகனும் ஆவார்.
ஆளுநரத்துக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]
- அவாலி : தெற்கு ஆளுநரகத்தின் பெட்ரோலிய நகராட்சி
- ஈசா டவுன் : முன்னர் மத்திய ஆளுநரகத்தின் ஒரு பகுதி, இப்போது தெற்கு ஆளுநரகத்தின் ஒரு பகுதி
- ஸல்லாக்
- ஹவார் தீவுகள்