தெபோரா ஜின்
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
![]() | இவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேலதிக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். குறிப்பாக, அவதூறாக அல்லது பாதிப்பாக அது அமையக்கூடாது. (March 2013) |
தெபோரா எஸ். ஜின் | |
---|---|
![]() | |
பிறப்பு | 1968|11|15|mf=yes |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | தேசிய செந்தரங்கள், தொழில்நுட்ப நிறுவனம்; கொலராடோ பல்கலைக்கழகம், பவுல்டர் |
கல்வி கற்ற இடங்கள் | பிரின்சுடன் பல்கலைக்கழகம்; சிகாகோ பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | தாமசு எஃப். உரோசன்பாம் |
விருதுகள் | மெக் ஆர்த்தர் ஆய்வுறுப்பினர் (2003) பெஞ்சமின் ஃபிராங்ளின் பதக்கம் (2008) அய்சக் நியூட்டன் பதக்கம் (2014) |
தெபோரா எஸ். ஜின் (Deborah S. Jin) (பிறப்பு நவம்பர் 15, 1968) ஓர் இயற்பியலாளர். தேசியச் செந்தரங்கள், தொழில்நுட்ப நிறுவனம் (NIST) யின் ஆய்வு உறுப்பினர்; கொலராடோ பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் கூடுதல் பேராசிரியர்; கொலராடோ பல்கலைக்கழகத்தில் உள்ள . NIST யின் இணை ஆய்வகமான JILAவின் ஆய்வு உறுப்பினர். முனைவர் ஜின் குழு 2003இல் முதன்முதலாக ஃபெர்மி செறிமத்தைக் கண்டுபிடித்தது.
இவர் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் ஆய்வு உறுப்பினர்;மேலும் அமெரிக்க கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் ஆய்வு உறுப்பினரும் ஆவார்..
ஜின் 1990இல் தன் இளவல் பட்டத்தைப் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் இயற்பியலில் முனைவர் பட்ட்த்தைச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1995இல் பெற்றார்.
விருதுகள்[தொகு]
ஜின் பல மதிப்பு மிக்க விருதுகளை பெற்றுள்ளார்:
- மெக் ஆர்த்தர் அறக்கட்டளையின் ஆய்வுதவி "நுண்மதியாளர் நல்கை" 2003 இல் பெற்றுள்ளார்.
- Scientific American இதழின் 2004அம் ஆண்டுக்கான "ஆண்டின் ஆய்வு தலைவர்" விருது.[1]
- ஃபிராங்ளின் நிறுவனம் தரும் 2008க்கான ஃபிராங்ளின் நிறுவன விருதுகள் கீழ் இயற்பியலுக்கான பெஞ்சமின் ஃபிராங்ளின் பதக்கம்.[2]
- வட அமெரிக்காவுக்கான UNESCOவின் லோரியல் அறிவியற் பெண்மணி விருதை (அவரது ஃபெர்மி செறிமக் கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டது) 2013இல் பெற்றார்.[3][4]
- இயற்பியல் நிறுவனத்தின் அய்சக் நியூட்டன் பதக்கம் [5]
- இயற்பியலுக்கான கோம்சுட்டோக் பரிசு 2014.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Superhot among the Ultracool
- ↑ "Benjamin Franklin Medal in Physics". Franklin Institute. செப்டம்பர் 13, 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 13, 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Award Ceremony
- ↑ 2013 L'Oréal-UNESCO For Women in Science Awards
- ↑ "Institute of Physics announces 2014 award winners". Institute of Physics. 29 ஜூலை 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 July 2014 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- Jin's CV at University of Colorado பரணிடப்பட்டது 2015-10-05 at the வந்தவழி இயந்திரம்
- Jin group home page. பரணிடப்பட்டது 2015-09-20 at the வந்தவழி இயந்திரம்