தென் மொராவியா
Jump to navigation
Jump to search
தென் மொராவியா செக் குடியரசின் ஒரு நிர்வாக பிரிவு ஆகும். இப்பகுதி அதன் வரலாற்றுப் பகுதியான மொராவியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது (ஜொபொவா லோட்டா பொஹிமியாப் பகுதிக்கு உட்பட்டது) உள்ளது. இதன் தலைநகரம் பிர்னோ, செக் குடியரசின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இப்பகுதி 1,169,000 மக்கள்தொகையினைக் கொண்டுள்ளது (2013 ஜூன் 30 இல்).[1] இதன் மொத்த பரப்பளவு 7,196.5 சதுர கிலோ மீட்டராகும்.
நிர்வாக பிரிவுகள்[தொகு]
தெற்கு மொராவியா 7 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை[தொகு]
பெயர் | மக்கள்தொகை [2] | பகுதி (சதுர கீ.மீ) | மாவட்டம் |
---|---|---|---|
பிர்னோ | 385,913 | 230 | பிர்னோ-நகர மாவட்டம் |
நாஜ்மோ | 34,097 | 66 | நாஜ்மோ மாவட்டம் |
ஹொடொனின் | 25,479 | 63 | ஹொடொனின் மாவட்டம் |
பிரெக்லாவ் | 25,098 | 77 | பிரெக்லாவ் மாவட்டம் |
வைஸ்கொவ் | 21,687 | 50 | வைஸ்கொவ் மாவட்டம் |
பிளான்ஸ்கோ | 20,852 | 45 | பிளான்ஸ்கோ மாவட்டம் |
கைஜோவ் | 11,599 | 30 | ஹொடொனின் மாவட்டம் |
பாஸ்கோவிஸ் | 11,454 | 28 | பிளான்ஸ்கோ மாவட்டம் |
குரிம் | 10,804 | 17 | பிர்னோ-நாடு மாவட்டம் |
இவான்ஸைஸ் | 9,571 | 48 | பிர்னோ-நாடு மாவட்டம் |
திஸ்னோவ் | 8,663 | 17 | பிர்னோ-நாடு மாவட்டம் |
குறிப்புகள்[தொகு]
- ↑ Nejnovější data o kraji: Jihomoravský kraj, http://www.czso.cz/x/krajedata.nsf/krajenejnovejsi/xb
- ↑ http://vdb.czso.cz/sldbvo
வெளி இணைப்புகள்[தொகு]
- (செக் மொழி) அதிகாரப்பூர்வ வலைத்தளம்
- (செக் மொழி) தெற்கு மொராவியா பிராந்தியம்
- Znojmo நகரத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்