தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திரம் (வைரம்)
தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திரம் ( Star of South Africa) இது டட்லி வைரம் என்றும் அழைக்கப்பட்ட ஒரு வைரம் ஆகும். இது 1869 ஆம் ஆண்டில் ஆரஞ்சு ஆற்றின் கரையில் ஒரு ஆடு மேய்ப்பனான கிரிகோ என்ற சிறுவனுக்கு கிடைத்தது. இது 47.69 காரட் (9.538 கிராம்) எடையுடைய ஒரு வெள்ளை வைரம் ஆகும். வெட்டப்படுவதற்கு முன் இருந்த வைரக் கல்லானது 83.5 காரட் (16.70 கிராம்) எடையுடன் இருந்தது.[1] இந்த பெரிய வைரக் கல் கண்டுபிடிப்பானது மேலும் பலரை அப்பகுதியில் வைர வேட்டையில் ஈடுபடத் தூண்டியது.
கல்லை வைத்திருந்த மேய்ப்பனுக்கு 500 ஆடுகள், 10 எருதுகள், ஒரு குதிரை ஆகியவற்றைக் கொடுத்து ஸ்கால்க் வான் நைகெர்க் என்பவர் வாங்கினார். இவர் இதற்கு முன் தன் பக்கத்து வீட்டில் வசித்த பதினைந்து வயது சிறுவனிடம் இருந்து 21.25 கேரட் (4.25 கிராம்) எடையுள்ள வைரத்தை (யுரேகா வைரம்) வாங்கி நல்ல விலைக்கு விற்றார்.[2][3]
இக்கல்லை ஸ்கால்க் வான் நைகெர்க் £11,200 க்கு லிப்சன்ஃபீல்ட் சகோதரர்களிடம் விற்றார். லிப்சன்ஃபீல்ட் சகோதரர்கள் இதை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்றனர். அங்கு இக்கல் இருமுறை கைமாறியது. இறுதியாக டூட்லியின் கவுண்டெஸ் ஆஃப் டியூட்லியால் 25,000 பவுண்டுகளுக்கு வாங்கப்பட்டது.[4][5] வில்லியம் வார்ட்டால் வாங்கப்பட்ட இந்த வைரமானது 95 சிறுசிறு வைரங்களாக மாற்றப்பட்டு தலை ஆபரணத்தில் பதிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Roberts, Brian (1976). Kimberley: turbulent city. New Africa Books. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-949968-62-3.
- ↑ Doughty, Oswald (1963). Early Diamond Days: The Opening of the Diamond Fields of South Africa. London: Longmans, Green and Co Ltd.
- ↑ Roberts, Brian (1976). Kimberley: turbulent city. New Africa Books. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-949968-62-3.
- ↑ Streeter, Edwin William, Hatten, Joseph & Keane, Augustus Henry (1882). The great diamonds of the world. Their history and romance. London, G. Bell & Sons. p. 241. பார்க்கப்பட்ட நாள் 2009-07-25.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)CS1 maint: Multiple names: authors list (link) Streeter, Edwin William, Hatten, Joseph & Keane, Augustus Henry (1882). The great diamonds of the world. Their history and romance. London, G. Bell & Sons. p. 241. பார்க்கப்பட்ட நாள் 2009-07-25.{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Williams, Gardner Fred (1904). The diamond mines of South Africa. New York, B. F. Buck & company. p. 123. பார்க்கப்பட்ட நாள் 2009-07-25.