தென் அமெரிக்கா வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1892 map of South America
Non-Native American Nations Control over South America 1700 and on.gif

தென் அமெரிக்காவின் வரலாறு என்பது கடந்த காலத்தைப் பற்றிய ஆய்வு ஆகும். இது குறிப்பாக எழுதப்பட்ட பதிவுகள், வாய்வழி வரலாறுகள், மரபுகள் ஆகியவற்றின் வழியாக தென் அமெரிக்க கண்டத்தில் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுகிறது. தென் அமெரிக்க வரலாறானது பரந்து பட்ட மனித கலாச்சாரங்களையும் நாகரிகங்களையும் கொண்டது. அமெரிக்காவின் மிகப் பழமையான நாகரிகம் நார்ட் சாக்கோ நாகரிகம் ஆகும். இது பெருவில் அமைந்துள்ளது. மேலும் உலகில் ஆறு தனித்துவமான நாகரிகங்களில் இதுவும் ஒன்று ஆகும். இந்த நாகரீகமானது எகிப்தின் பிரமிடுகளின் சமகாலத்தவை. இது கிட்டத்தட்ட இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேஸோமேரியன் ஓல்மேக்கை முன்னிலைப்படுத்தியது.

16 மற்றும் 19 ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய காலனி ஆதிக்கம், அந்நாட்டு மக்கள், அடிமைகள் ஆகியோரால் பிரச்சனைகள், கலக்கம் நிறைந்த இடமாக மாறியது. 19 ம் நூற்றாண்டில் ஸ்பானிய அரசுக்கு எதிரான சுதந்திரப் புரட்சியில் வென்ற பின் தென் அமெரிக்காவில் சமூக மற்றும் அரசியல் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இதனால் நாட்டு வளர்ச்சி திட்டங்கள், ஐரோப்பாவில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை ஏற்றுக் கொள்ளுதல், பன்னாட்டு வாணிப வளர்ச்சி, அருகில் உள்ள நாடுகளைக் காலணி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருதல் மற்றும் தன் வளர்ச்சியை சமநிலைப் படுத்திக் கொள்ளப் போர்கள் ஆகியவை நடைபெற்றன. இக்கால கட்டத்தில் தான் இந்தியரின் உரிமைகள் மற்றும் கடமைகள், அங்கீகாரம் பெற்றது.

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்[தொகு]

வான்வழி காட்சி அமேசான் மழைக்காடுகள் அருகே, மனௌசு
Blakey 105Ma - COL.jpg

முதல்ஊழி மற்றும் முற்கால மெசோஜோக் ஊழிக்காலத்தில் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்கள் ஆகியவை கோண்ட்வானா என்ற நிலப்பகுதியாக இணைந்திருந்தன. இது மீப்பெரும் கண்டத்தின் ஒரு பகுதி ஆகும். பின்னர் ஆப்பிரிக்காவில் இருந்து பிரிந்து தென் அமெரிக்கா மற்றும் அண்டார்டிக்கா கண்டங்கள் உருவாயின. இக்கண்டங்கள் பிரிந்து தனித்தனி தீவுகளாக மாறின. முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு பின் தென் அமெரிக்கா உலகின் பிற பகுதிகளில் இருந்து தனிமைப் படுத்தப்பட்டது. இது கண்டத்தில் உள்ள உயிர் இனங்களின் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுத்தது.[1]

மியோசைன் பிற்பகுதியில் மில்லியன் ஆண்டுகள் கடந்தபிறகு, தென் அமெரிக்கா வட அமெரிக்காவுடன் பனாமா இணைப்புடன் இணைந்தது. பனமா இணைப்பு பொலிவர் இணைப்புடன் தொடர்புடையது. அமெரிக்கவுடனான பரிமாற்றம் இரு கண்டங்களிலிருந்தும் உயிரியலை மாற்றியது.[2] சோம்பல் விலங்கின் படிமம் தென் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் படிமம் ஆகும். இது கறுப்பு கரடியின் அளவில் இருந்தது. வட அரைக்கோளத்தில் இருந்த மிருகங்கள் தென் அமெரிக்காவை நோக்கி இடம் பெயர்ந்தன. ஆனால் தெற்கிலிருந்து வடக்குக்கு இடப்பெயர்ச்சி குறிப்பிடும்படி நிகழவில்லை. வட அமெரிக்க விலங்கினங்களின் ஊடுருவலின் விளைவாக, தென் அமெரிக்க இனங்களின் நூற்றுக்கணக்கான பகுதிகள் சிறிய காலப்பகுதியில் அழிந்து விட்டன. தற்போதைய அமெரிக்காஇல் தென் அமெரிக்க பாலூட்டிகளில் சுமார் 60% வட அமெரிக்க இனங்களிலிருந்து உருவானவை.[3] சில உயிரினங்கள் வட அமெரிக்கவின் சூழ்நிலையை ஏற்று அங்கு வாழ்கின்றன. சோம்பல் விலங்கு தவிர எறும்புத்தின்னி, கெபிபரா, அர்மடிலோ ஆகிய மிருகங்களும்தொடர்ந்து வட அமெரிக்கா சென்றன. டெரர் பறவை தென் அமெரிக்காவில் இருந்து வட அமெரிக்கவிற்கு செல்வது கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Marshall, 1988, p.380
  2. Marshall, 1988, p.382
  3. Marshall, 1988, p.387