தென்னாப்பிரிக்க மாணவர் இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்னாப்பிரிக்க மாணவர் இயக்கம் (South African Students' Movement) என்பது தென்னாப்பிரிக்க பள்ளி மாணவர்களின் நிறவெறி எதிர்ப்பு அரசியல் அமைப்பாகும். 1976 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட சோவெட்டோ எழுச்சியில் இந்த அமைப்பின் பங்களிப்பிற்காக மிகவும் பிரபலமானது.[1][2][3] 1976 ஆம் ஆண்டு வாக்கில் இவ்வமைப்பு கறுப்பு உணர்வு இயக்கத்துடன் வலுவாக அடையாளம் காணப்பட்டது. 1977 ஆம் ஆண்டு அக்டோபரில் நிறவெறி அரசாங்கத்தால் இவ்வமைப்பு தடைசெய்யப்பட்டது.[3] இந்நடவடிக்கை எழுச்சிக்கான அடக்குமுறை அரசின் பிரதிபலிப்பின் ஒரு பகுதியாகும்.[4]

தென்னாப்பிரிக்க மாணவர் இயக்கமானது 1972 ஆம் ஆண்டில் திரான்சுவால் மாகாணத்தில் நிறுவப்பட்டது. சோவெட்டோ உயர்நிலைப் பள்ளிகளில் மிகவும் தீவிரமாக செயலில் இருந்தது.[4] கல்வியாளர் நோசிபோ டிசெகோவின் கூற்றுப்படி இதன் முன்னோடி ஆப்பிரிக்க மாணவர் இயக்கம் 1968 ஆம் ஆண்டில் சொவெட்டோவில் நிறுவப்பட்டது. ஆப்பிரிக்க மாணவர் இயக்கத்தின் தலைவர்கள் கறுப்பு உணர்வு தென்னாப்பிரிக்க மாணவர் அமைப்பின் தலைவர்களுடன் கலந்தாலோசித்து ஆப்பிரிக்க மாணவர் இயக்கத்தை மறுபெயரிடுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் முடிவுசெய்தது. பின்னர் பாண்டு கல்வி முறைக்கு எதிராக பல பரந்த பிரச்சாரங்களைத் தொடங்கியது.[5][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Heffernan, Anne (2016). Students Must Rise: Youth Struggle in South Africa Before and Beyond Soweto '76. Noor Nieftagodien. Johannesburg: Wits University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86814-978-0. இணையக் கணினி நூலக மைய எண் 974583465.
  2. 2.0 2.1 Gerhart, Gail M. (1994). The 1976 Soweto Uprising (in ஆங்கிலம்). University of the Witwatersrand, Institute for Advanced Social Research.
  3. 3.0 3.1 Hirson, Baruch (2016). Year of Fire, Year of Ash: The Soweto Revolt: Roots of a Revolution? (in ஆங்கிலம்). Zed Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-928246-07-7.
  4. 4.0 4.1 "South African Students Movement (SASM)". South African History Online. 31 March 2011. பார்க்கப்பட்ட நாள் 2023-01-07.
  5. Diseko, Nozipho J. (1992). "The Origins and Development of the South African Student's Movement (SASM): 1968–1976". Journal of Southern African Studies 18 (1): 40–62. பன்னாட்டுத் தர தொடர் எண்:0305-7070. https://www.jstor.org/stable/2637181.