உள்ளடக்கத்துக்குச் செல்

தெக்கு சந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெக்கு சந்து
Tek Chand
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
விளையாட்டு
நிகழ்வு(கள்)ஈட்டி எறிதல் (எப்54) மற்றும் குண்டு எறிதல் (விளையாட்டு) (எப்55)
சாதனைகளும் விருதுகளும்
மாற்றுத் திறனாளர் இறுதி2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
பதக்கத் தகவல்கள்
நாடு  இந்தியா
ஆண்கள் தடகளப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஈட்டி எறிதல்

தெக்கு சந்து (Tek Chand ) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரராவார். குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக இவர் விளையாடுகிறார்.[1][2][3] அரியானா மாநிலத்தின் ரேவாரி மாவட்டத்தில் பிறந்த இவர், ஒரு சாலை விபத்தினால் மாற்றுத் திறனாளியானார்.[4] டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் குண்டு எறிதல் போட்டியின் எப்55 வகை போட்டிப் பிரிவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[5][6] இப்போட்டியின் தொடக்க விழாவில் தனிமைப்படுத்தப்பட்ட மாரியப்பன் தங்கவேலுக்குப் பதிலாக இந்தியக் குழுவின் கொடி ஏந்துபவராக இவர் நியமிக்கப்பட்டார்.[7][8] 9.04 மீட்டர் தொலைவுக்கு எறிந்தவராக இருந்தாலும் எட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்ட அப்போட்டியில் இவரால் கடைசி இடத்தையே பிடிக்க முடிந்தது.[9][10] முதலில் ஆண்களுக்கான எப்54 வகை ஈட்டி எறிதல் போட்டிக்காக இவர் பட்டியலிடப்பட்டார், ஆனால் பின்னர் சேர்க்கப்பட்டார்.[11] 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.[4][12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "PCI picks 24 para athletes for Tokyo Paralympics". Deccan Herald (in ஆங்கிலம்). 2021-07-03. பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
  2. Sportstar, Team. "Tokyo Paralympics: Indians in action on August 27 - Tek Chand to compete in men's shot put F55 final". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
  3. "Tokyo Paralympics Declared Open, Tek Chand Leads Indian Contingent at Opening Ceremony". News18 (in ஆங்கிலம்). 2021-08-24. பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
  4. 4.0 4.1 thebridge (2021-08-24). "Who is Tek Chand - India's flag bearer at Tokyo Paralympics?". thebridge.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
  5. "Tokyo Paralympics: PM Modi wishes para-athletes as Tek Chand leads India in inspiring opening ceremony". இந்தியா டுடே.
  6. "Tokyo Paralympics: Vinod Kumar, Tek Chand Among 5 Indian Athletes To Attend Opening Ceremony | Olympics News". NDTVSports.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
  7. "Tokyo Paralympics: Javelin thrower Tek Chand lead India's charge during Opening Ceremony". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-08-24. பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
  8. "Tek Chand named new flag-bearer in Paralympics opening ceremony". 24 August 2021. https://www.aninews.in/news/sports/others/tokyo-paralympics-javelin-thrower-tek-chand-named-new-flag-bearer-of-india-for-opening-ceremony20210824110809. பார்த்த நாள்: 4 October 2022. 
  9. "Paralympics 2021: Tek Chand finishes 8th in men's shot put final | Tokyo Paralympics News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). ANI. 27 Aug 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
  10. Sportstar, Team. "Tokyo Paralympics 2020: Tek Chand finishes last in Shot Put Final". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
  11. "Paralympics 2021: Tek Chand finishes 8th in men's shot put final | Tokyo Paralympics News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). ANI. 27 Aug 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
  12. Imtiaz, Md (2021-08-27). "Tokyo Paralympics: Tek Chand finishes eighth in Men's F55 Shot Put". thebridge.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெக்கு_சந்து&oldid=3920507" இலிருந்து மீள்விக்கப்பட்டது