தூலலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தஞ்சை பெரிய கோயில் கருவறை விமானம்

தூலலிங்கம் என்பது சிவாலயங்களின் கோபுரமாகும். சைவ சமயத்தில் ஆகம முறைப்படி கட்டப்படுகின்ற கோயில் கோபுரங்களையும் சிவபெருமானுடைய உருவமாக வணங்குகின்றனர். [1] இதனால் லிங்கமூர்த்தியின் வடிவமாக கோபுரத்தினைக் கருதுகின்றார்கள்.


கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று தமிழில் முதுமொழியொன்று உள்ளது. சிவாலயங்களுக்குச் சென்று முறைப்படி வணங்க இயலாதவர்கள் கூட சிவபெருமானை கோபுரத்தில் தரிசனம் செய்து வழிபடலாம். இந்த வழிபாட்டு முறை தத்துவார்த்த வழிபாடாகும். சிவயாத்திரையாக செல்பவர்கள் கோயில்கள் பூட்டப்பட்டிருந்தாலும் கோபுரத்தினை வழிபட்டு அந்தக் கோயிலையும் வழிபட்டதாக எண்ணிக்கையில் இணைத்துக் கொள்வர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/courses/diploma/d061/d0611/html/d061123.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூலலிங்கம்&oldid=2118250" இருந்து மீள்விக்கப்பட்டது