தூர்வாரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூர்வாரல்

தூர்வாரல் (Dredging) என்பது நீருக்கு அடியில் தோண்டும் நடவடிக்கை ஆகும். இது பொதுவாக ஆழமற்ற பகுதியை ஆழமாக்க மற்றும் நீர் தேக்கங்களிலுள்ள தேவையற்ற மணல் மற்றும் படிவுகளை அகற்றும் பணி ஆகும்.மேலும் கப்பல் செல்லும் பாதையை அகல படுத்தவது, கப்பல் பயனிக்க ஆழமான பாதையை உருவாக்குவதும் தூர்வாரல் எனலாம்.

சில கடற்கரைகளில், கடற்கரை அரிப்புகளால் அரிக்கப்பட்ட மணல்களை கடலில் தோண்டி அதே இடத்தில் மீண்டும் நிரப்பும் பணியும் தூர்வாரல் என அழைக்கப்படுகிறது.

எந்தவொரு சாதனம் அல்லது இயந்திரம் நீருக்கு கீழே இருக்கும் பொருள்களை எடுக்க உதவினாலும் அது தூர்வாரி எனப்படும். உதாரணமாக, ஒரு கரண்டியை, குச்சி அல்லது கயிற்றில் இணைத்து நீருக்கு அடியில் உள்ள பொருள் மனிதனால் நீக்கப்பட்டால் அது தூர்வாரி என அழைக்கப்படும். இந்த கருத்தைக்கொண்டு இதை ஒரு இயந்திரமாக இருபுற அகழ்வாளி கொண்டு உருவாக்கினார்கள். சில நேரங்களில் பாரந்தூக்கி அகழ்வாளியுடன் இணைக்கப்பட்டு அந்த அமைப்பு ஒரு படகுடன் இணைக்கப்படும். இந்த முழு இயந்திரமும் தூர்வாரி என அழைக்கப்படுகிறது.

தூர்வாரல் நடவடிக்கையில் உருவாக்கும் தோண்டப்பட்ட மணலை சற்று தொலைவில் கொட்டுவது நல்லது இல்லையெனில் அது அரிப்பினால் மீண்டும் தோண்டிய இடத்தை நிரப்பிவிடும். சில நேரங்களில் தோண்டப்பட்ட மணலை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தலாம். தூர்வாரல் சில நேரங்களில் நீர்சார் சூழல் மண்டலத்தில் பாதிப்பை எற்படுத்தலாம். எனவே சரியான அரசு அனுமதியுடன் மட்டுமே இந்த பணியை செய்ய வேண்டும். தங்க சுரங்கங்களில் தூர்வாரல் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூர்வாரல்&oldid=2746329" இலிருந்து மீள்விக்கப்பட்டது