தூய யோவான் மேல்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூய யோவான் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி திருமண்டலத்தைச் சார்ந்த ஒரு கிறித்தவ கல்வி நிலையமாகும். கி.பி 1878 -ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பாளையங்கோட்டை மற்றும் சுற்றுப்புற மாவட்ட மாணவர்களின் தொடக்க மற்றும் மேல்நிலைக்கல்விக்கு கல்விச் சேவை செய்து வருகிறது.

வரலாறு[தொகு]

கிறித்தவ மிசனரி சங்கத்தால் கி.பி 1844 -ம் ஆண்டு பாளையங்கோட்டையில் ஒரு வாடகை கட்டிடத்தில் இருமொழி மூலம் பயிற்றுவிக்கும் கல்விநிலையமாக ஆரம்பிக்கப்பட்டதே தூய யோவான் மேல்நிலைப்பள்ளி மற்றும் தூய யோவான் கல்லூரி ஆகியவற்றின் ஆரம்பமாகும். பின்னர் இந்தப் பள்ளி பாளையில் இருந்து 3 கி.மீ தொலைவில் இருந்த வண்ணாரப்பேட்டை பகுதிக்கு மாற்றப்பட்டது. 1871 ம் ஆண்டு உயர்நிலை பள்ளிக்கான அனைத்து வசதிகளும் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டது. 1878 -ம் ஆண்டு இந்த பள்ளியின் இன்னொரு பிரிவு தூய யோவான் கல்லூரியாக ஏற்றம் அடைந்தது. 1928 -ம் ஆண்டு பாளையங்கோட்டையில் பள்ளி தற்போது அமைந்திருக்கும் இடத்தில் அமைக்கப்பட்டது.

1978 ம் ஆண்டு ஜூலை மாதம் தூய யோவான் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக ஏற்றம் அடைந்தது. தற்போது 4000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ள இக்கல்வி நிலையமானது கிறித்தவ மாணவர்களுக்கு மட்டுமல்லாது பிற மதத்தைச் சார்ந்தவர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.