தூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்
வரைவு22 ஏப்ரல் 1963
கையெழுத்திட்டது24 ஏப்ரல் 1963
இடம்வியன்னா
நடைமுறைக்கு வந்தது19 மார்ச்சு 1967
நிலை22 நாடுகள்
கையெழுத்திட்டோர்48
தரப்புகள்189 (சூன் 2013ல்)
வைப்பகம்ஐநா பொதுச்செயலாளர்
மேற்கோள்கள்500 U.N.T.S. 95; 23 U.S.T. 3227
மொழிகள்சீனம்,ஆங்கிலம், பிரஞ்சு, உருசியம் மற்றும் எசுப்பானியம்
முழு உரை
தூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம் விக்கிமூலத்தில் முழு உரை

தூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம் (Vienna Convention on Consular Relations) என்பது சர்வதேச நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளை பேணுவதற்காக 1963 ஆம் ஆண்டு வியன்னா மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை குறிக்கும். வேறொரு நாட்டில் இயங்கும் ஒரு தூதரகத்திற்கு இரண்டு முக்கிய பொறுப்புகள் உள்ளன. அவைகளாவன அ) தனது நாட்டு குடிமக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் தமது நாட்டின் வியாபாரம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தல்கள் ஆகும். இந்த ஒப்பந்தத்தில் 2013 ஜூன் மாத நிலவரப்படி இந்த ஒப்பந்தத்தை ஏற்று 189 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி ஒரு நாட்டில் உள்ள தூதர் சிறப்பு விருந்தினர் என்ற தகுதியைப் பெறுகிறார். சிறப்புச் சலுகைகளுக்குத் தகுதி படைத்தவராகிறார். தாய்நாட்டுடன் அவர் மேற்கொள்ளும் தகவல் பரிமாற்றங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும், சுதந்திரமாகவும் பயமின்றியும் தூதர்கள் பணி செய்வதை ஒவ்வொரு நாடும் உறுதிசெய்ய வேண்டும் என இந்த ஒப்பந்தத்தில் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. [1]

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்[தொகு]

இந்த ஒப்பந்தத்தில் 76, சரத்துகள் உள்ளன. அவைகளில் முக்கியமானவையாக,

 • தூதரக எல்லைக்குள் அத்துமீறி நுழைதல் கூடாது
 • எந்த நேரத்திலும், எந்த நோக்கமுமின்றி தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்துக்கொள்ள (Persona Non grata) சொல்ல hosting countryக்கு உரிமை உண்டு.
 • அந்நிய நாட்டு குடிமகன் கைது செய்யப்பட்டால், உடனடியாக அந்நாட்டு தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
 • சரத்து 1 டி: ஒரு தூதரகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் சிறப்பு விலக்குரிமையைப் பெறத் தகுதி படைத்தவர்கள்.
 • சரத்து 9 : ஒரு நாட்டில் உள்ள தூதர் மற்றும் தூதரகப் பணியாளர்களை, சம்பந்தப்பட்ட நாடு ஏற்றுக்கொள்ள முடியாது என எந்த விளக்கமும் இல்லாமல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அறிவிக்கலாம். இதை ஏற்று சம்பந்தப்பட்ட நாடுகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர்களைத் திரும்பப் பெற வேண்டும். இல்லா விட்டால் ராஜதந்திரப் பாதுகாப்பை இழக்க நேரிடும்.
 • சரத்து 22: தூதரகம் அமைந்துள்ள வளாகம் கேடு, சேதம் விளைவிக்கக் கூடாத இடமாகும். தூதரின் அனுமதியின்றிச் சம்பந்தப்பட்ட நாட்டைச் சேர்ந்த எவரும் வளாகத்துள் நுழையக் கூடாது. தூதரகத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாப்பு அளிப்பது சம்பந்தப்பட்ட நாடுகளின் கடமை. தூதரகத்துக்குள் எதையும் தேடுவதற்கோ, ஆவணங்களைப் பறிமுதல் செய்யவோ அனுமதி கிடையாது.
 • சரத்து 30: தூதர்கள் குடியிருக்கும் வீட்டுக்கும் இது பொருந்தும்.
 • சரத்து 27: தூதர்கள் தங்கள் தாய்நாட்டுடன் மேற்கொள்ளும் தகவல் பரிமாற்றத்துக்குச் சுதந்திரமும் பாதுகாப்பும் சம்பந்தப்பட்ட நாடுகள் வழங்க வேண்டும். சந்தேகத்தின்பேரில் தூதரின் கைப்பையைத் திறந்து சோதனையிடக் கூடாது. தூதரின் தபால்கள், கூரியர் கவர்கள் தடுத்து வைக்கப்படக் கூடாது.
 • சரத்து 29: தூதர்கள் எந்த வடிவத்திலும் கைதுசெய்யப்படுவதற்கு உள்ளாக மாட்டார்கள். சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் இருந்து விலக்கு உண்டு.
 • சரத்து 31 (1சி): ராஜதந்திரப் பாதுகாப்புப்படி நடவடிக்கைகள் பொருந்தாது. வெளி இடங்களில் அலுவலகம் சார்ந்த பணியில் இருக்கும்போதும் இது பொருந்தும்.
 • சரத்து 34 மற்றும் 36: வரியில் இருந்து விலக்கு. சுங்க வரியில் இருந்தும் விலக்கு.
 • சரத்து 37: தூதரகத்தில் பணியாற்றும் பணியாளர்களின் குடும்பத்தினரும் இந்தச் சலுகைகள் அனைத்தையும் பெற முடியும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 டி‍, கார்த்திக் (டிசம்பர் 23, 2013), வியன்னா... வியன்னா..., தி தமிழ் இந்து‍, பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 24, 2013 {{citation}}: Check date values in: |accessdate= and |date= (help)CS1 maint: date and year (link)