உள்ளடக்கத்துக்குச் செல்

துளை பொறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டுமானக் களம் ஒன்றில் துளை பொறியொன்று பயன்படுத்தப்படுவதை இங்கே காணலாம்.

துளை பொறி என்பது கட்டிடத் துறையிலும், ஏனைய குடிசார் பொறியியல் சார்ந்தகட்டுமானத் துறைகளிலும் பயன்படுகின்ற பலவகைப் பொறிகளுள் ஏதாவதொன்றைக் குறிக்கும். பல மீட்டர்கள் ஆழம் வரை நிலத்தைத் துளைக்கக்கூடிய துளை பொறிகள் உள்ளன. கட்டிடத்துறையில், பாரிய கட்டிடங்களுக்கான முளைவகை அத்திவாரங்களை அமைப்பதற்கு இவை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. நீர் பெறுவதற்காகக் குழாய்க் கிணறுகள் அல்லது துளைக் கிணறுகளை அமைப்பதிலும், பெற்றோலியத் துறையில் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுவதிலும் இவற்றின் பங்கு முக்கியமானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துளை_பொறி&oldid=3397399" இலிருந்து மீள்விக்கப்பட்டது