துல்லியத் தாக்குதல்
துல்லியத் தாக்குதல் (surgical strike) என்பது ஒரு திட்டமிடப்பட்ட படைத்துறை இரகசிய அதிரடித் தாக்குதல் ஆகும். இதன் நோக்கம் சரியான இராணுவ இலக்கிற்கு மட்டுமே சேதம் விளைவிப்பது. கூடுமானவரை சுற்றியுள்ள கட்டமைப்புகள், வாகனங்கள், கட்டிடங்கள், அல்லது பொது சொத்துக்கள் போன்றவற்றுக்குச் சேதம் ஏற்படுத்தாமலோ அல்லது சேதத்தைக் குறைப்பதோ ஆகும்.[1]
அருகிலுள்ள பகுதிகள் மற்றும் பொதுமக்களுக்குச் சேதமற்றோ அல்லது குறைந்தபட்ச சேதம் விளைவிக்கும் வகையிலோ விரைவான மற்றும் இலக்கை மட்டும் தாக்கும் நடவடிக்கை ஆகும். தாக்குதல் நடவடிக்கை இலக்குகளை அடையவும் வெளியேறவும் வானூர்திகளைப் பயன்படுத்துவர். தாக்குதல் நடவடிக்கைக்குச் சிறப்பு படை அணிகளை விரைவாக வானூர்தி துணையுடன் தரை இறக்கி தாக்குதலை முடிப்பர்.
அமெரிக்கப் படைகளால் 2003 ஈராக் போரின், ஆரம்ப கட்டங்களில் சதாம் உசேனின் கட்டுப்பாட்டில் இருந்த ஈராக்கின் அரசு கட்டிடங்கள் மற்றும் இராணுவ இலக்குகள் ஆகியவற்றைத் தாக்கி முடக்குவதற்கான ஒரு முயற்சியாக அமெரிக்க விமானங்களால் துல்லியமாக குண்டுகள் வீசி தாக்கப்பட்டன. இது துல்லியத் தாக்குதல் முறைக்கு, ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
தெற்காசிய எடுத்துக்காட்டுகள்
[தொகு]இந்தியா
[தொகு]2016-இல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய ஊரித் தாக்குதலுக்கு பதிலடி தரும் வரும் வகையில், இந்திய இராணுவம், காசுமீர் மாநிலத்தை ஒட்டிய, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே தீவிரவாதிகளின் இயங்குதளங்கள் மீது 2016 செப்டம்பர் 29 அன்று இரவு இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலில் 38 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shultz, Jr., Richard H.; Pfaltzgraff, Robert L., eds. (1992).
- ↑ "துல்லிய தாக்குதல்: இந்திய ராணுவம் சொன்னது என்ன?". செய்தி. பீபிசி தமிழ். Retrieved 30 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)