துன்முகி ஆண்டு
Appearance
துன்முகி ஆண்டு என்பது தமிழ்ப் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் முப்பத்தாம் ஆண்டாகும். இந்த ஆண்டை செந்தமிழில் வெம்முகம் என்றும் குறிப்பர்
துன்முகி ஆண்டு வெண்பா
[தொகு]துன்முகி ஆண்டு எப்படிப்பட்டது என்பது குறித்து இடைக்காட்டுச் சித்தர் இயற்றியதாக கூறப்படும் வெண்பா
மிக்கான துன்முகியில் வேளாண்மை யேறுமே
தொக்க மழை பின்னே சொரியுமே மிக்கான
குஜர தேசத்தில் குறைதீர வே விளையும்
அச்சமில்லை வெள்ளையரி தாம்[1]
இந்த வெண்பாவின்படி இந்த ஆண்டில் உலகெங்கும் மழை பொழியும். மண்வளம் அதிகமாகும். வேளாண்மை தழைக்கும். தானியங்கள் பெருகுவதுடன் பால் உற்பத்தியும் கூடி மக்கள் மகிழ்வுடன் வாழ்வார்கள் என்கிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "துன்முகி வருடம் புத்தாண்டு ராசி பலன்கள்". http://www.trttamilolli.com. Retrieved 14 ஏப்ரல் 2017.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ ஜோதிபூஷண் வேங்கடசுப்பிரமணியன் (21 ஏப்ரல் 2016). "துன்முகி வருட ராசி பலன்கள்". கட்டுரை. தி இந்து. Retrieved 14 ஏப்ரல் 2017.