துகு கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துகு கல்வெட்டு
செய்பொருள்கல்
அளவு1 மீட்டர்
எழுத்துபல்லவ எழுத்துமுறையில் அமைந்த சமசுகிருத கல்வெட்டு
உருவாக்கம்5ஆம் நூற்றாண்டின் முற்பகுதி
கண்டுபிடிப்புபாரு தும்பு குக்கிராமம், துகு கிராமம், கோஜா, வடக்கு ஜகார்த்தா, இந்தோனேசியா
தற்போதைய இடம்இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகம், ஜகார்த்தா
பதிவுD.124

துகு கல்வெட்டு (Tugu inscription) என்பது இந்தோனேசியாவின் வடக்கு ஜகார்த்தாவின் கோஜாவில் உள்ள துகு கிராமத்தின், படுதும்பு குக்கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டாகும். இது கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெட்டப்பட்ட தருமநகர கல்வெட்டுகளில் ஒன்றாகும். இந்த கல்வெட்டில் நீரியல் திட்டங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன; ராஜாதிராஜகுருவின் உத்தரவின் பேரில் சந்திரபாகா ஆற்றின் பாசனம் மற்றும் நீர் வடிகால் திட்டம் மற்றும் அவரது 22 வது ஆட்சி ஆண்டில் மன்னர் பூர்ணவர்மனின் உத்தரவின்படி கோமதி ஆற்றின் நீர் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கைத் தடுப்பதற்காகவும், வறட்சி காலங்களில் நீர்ப்பாசனத் திட்டமாகும் முறையில் ஆற்றை நேராக்கவும் அகலப்படுத்தவும் அகழும் திட்டமாக அது மேற்கொள்ளபட்டது.

1911 இல் பி. டி ரூ டி லா ஃபெய்லியின் முன்முயற்சியால், துகு கல்வெட்டானது Bataviaasch genootschap van Kunsten en Wetenschappen அருங்காட்சியகத்திற்கு (தற்போது இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகம் ) கண்டுபிடிப்பு எண் டி.124 என்ற எண்ணிடப்பட்டு மாற்றப்பட்டது. இக்கல்வெட்டானது சுமார் ஒரு மீட்டர் அளவுள்ள வட்டமான முட்டை போன்ற கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

உள்ளடக்கம்[தொகு]

துகு கல்வெட்டு பல்லவ எழுத்துமுறையில் எழுதப்பட்டுள்ளது. இது சமசுகிருத ஸ்லோக வடிவத்தில் உள்ளது. கல்லின் மேற்பரப்பைச் சுற்றி ஐந்து வரிகளைக் கொண்டதாக உள்ளது. தருமநகர சாம்ராச்சியத்தின் பிற கல்வெட்டுகளைப் போலவே, துகு கல்வெட்டும் அது வெட்டப்பட்ட நாளைக் குறிப்பிடவில்லை. இக்கல்வெட்டின் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்ததாக அதன் எழுத்தமைதியைக் கொண்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. துகு கல்வெட்டின் எழுத்துகள் மற்றும் சிடாங்யாங் கல்வெட்டு ஆகியவை குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளன. அதனால் இந்த கல்வெட்டுகளை எழுதியவர் ஒரே நபர் என்ற அனுமானிக்கின்றனர்.

துகு கல்வெட்டு ஸ்ரீ மகாராஜா பூர்ணவர்மனின் ஆணையைக் குறிப்பிடும் மிக நீளமான தருமநகர கல்வெட்டு ஆகும். கோமதி மற்றும் சந்திரபாகா ஆறுகளின் கால்வாய்கள் வெட்டி முடிக்கப்பட்டதன் நினைவாக, அவரது 22 ஆம் ஆட்சி ஆண்டில் கல்வெட்டு வெட்டப்பட்டது. கல்வெட்டில் ஒவ்வொரு வாக்கியத்தின் தொடக்கத்திற்கும் முடிவிற்கும் இடையே உள்ள பிரிவைக் குறிக்கும் வகையில் நேராக திரிசூலத்துடன் முடிசூட்டியுள்ள ஒரு அதிகாரியின் உருவம் உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. C.M. Pleyte, "Uit Soenda’s Voortijd" Het Daghet 1905/1906:176-dst.
  2. H. Kern, "Een woord in ‘Sanskrit opschrift van Toegoe verbeterd" TBG. LII. 1910:123
  3. N.J. Krom, "Inventaris der Hindoe-oudheden" ROD 1914, 1915:19 (no.35)
  4. Hindoe-Javaansche Geschiedenis, ‘s-Gravenhage, Martinus Nijhof 1931:79-81
  5. J.Ph. Vogel, "The Earliest Sanskrit Inscriptions of Java" ROD. 1914, 1915:28-35; plate 27
  6. F.D.K. Bosch, "Guru, Drietand en Bron" BKI 107, 1951: 117-134. Juga terjemahan bahasa Inggris "Guru, Trident and Spring" dalam Selected Studies in Indonesian Archaeology, The Hague : Martinus Nijhof, 1961:164-dst
  7. J. Noorduyn and H.Th. Verstappen, "Purnavarman Riverworks Near Tugu" BKI 128, 1972:298-307.
  8. L.Ch. Damais, "Les Ecritures d’Origine Indienne en Indonesie et dans le Sud-Est Asiatique Continental’ BSEI XXX(40) 1955:365-382.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துகு_கல்வெட்டு&oldid=3462607" இலிருந்து மீள்விக்கப்பட்டது